வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

அந்த காலத்துலயே இவ்வளவு சம்பளமா? சிவாஜி, பத்மினி வாங்கிய பணம்

நடிகர்களின் சம்பளத்தை கேட்டு எப்போதுமே தயாரிப்பாளர்கள் தலையில் துண்டை போட்டு கொண்டு தான் இருக்கின்றனர். இன்று நடிகர்களில் அதிகபட்சமாக 300 கோடி சம்பளம் வாங்குகிறார் நடிகர் அல்லு அர்ஜுன். நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், ஐஸ்வர்யா ராய் போன்றோர்கள் உள்ளனர்.

இன்று சம்பளம் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கும் நிலையில், சினிமா ஆரம்ப நிலையில் இருந்த பொது நடிகர் நடிகைகள் என்ன சம்பளம் பெற்றார்கள் என்று தெரியுமா? 65 வருடத்துக்கு முன், சிவாஜி, பத்மினி போன்ற நடிகர்கள் வாங்கிய சம்பளத்தை கேட்டாள், ஆச்சரியத்தை தான் ஏற்படுத்துகிறது.

அந்த காலத்துலயே இவ்வளவு சம்பளமா?

அந்த காலத்தில் ஹாலிவுட்டின் தி எஜிப்தியன் திரைப்படம் பிரபலமாயிருந்தது. அந்த கதையை தழுவி, தங்க புதுமை கதையை எழுதினார்கள். அந்த படத்தை தழுவி எடுத்தாலும் கதை வேறு. அந்த படத்தில் மணிவண்ணன் என்ற கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசனும், செல்வி என்ற வேடத்தில் பத்மினியும் நடித்தனர்.

மாய மோகினி என்ற கதாபாத்திரம் ஒன்று உருவாக்கப்பட்டது. டி.ஆர்.ராஜகுமாரி மாய மோகினியாக நடித்தார். இந்த படத்தில் துவங்கி, சிவாஜி பத்மினி இருவருக்கும் ஜாக்பாட் தான். இந்த படத்தில் சிவாஜி பத்மினி இருவருக்கும் 60,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது. டி.ஆர்.ராஜகுமாரி க்கு 25,000 ரூபாய் சம்பளமாக கொடுக்க பட்டது.

இன்றளவும், பலரின் மாத சம்பளமே இந்த தொகை தான். ஆனால் அந்த காலத்தில் இவர்கள் வாங்கிய சம்பளத்தின் மதிப்பை, இன்றைய தேதியில் பார்த்தோமேயானால், கிட்டத்தட்ட 60 கோடிக்கு மேல் இருக்கும்.

Trending News