ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

சிவாஜி கணேசன் செய்த செயலால் மிரண்டு போன பாலய்யா.. நடிகர் திலகம்னா சும்மாவா?

சினிமாவில் நடிக்கும் அனைத்து நடிகர்களும் நடிப்பிற்கு பெயர் பெறுவதில்லை. சிலரது நடிப்பு மட்டுமே பாராட்டை பெறுகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போது வரை நடிப்பு என்றால் ஒருவரின் பெயரை தான் உச்சரிப்பார்கள். அவர் வேறு யாருமல்ல நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவர் இந்த மண்ணை விட்டு பிரிந்தாலும் அவரின் நடிப்பு மூலம் மக்கள் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

சிவாஜி கணேசன் வெள்ளித்திரையில் தோன்றுவதற்கு முன்பே ஏராளமான மேடை நாடகங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். அதன் பின்னர் தான் மாபெரும் வெற்றி பெற்ற பராசக்தி படத்தில் நாயகனாக அறிமுகமாகி ஒரே படம் மூலம் ஆயிரக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்தார்.

ஆனால் சிவாஜி கணேசன் பராசக்தி படத்தில் அறிமுகமாகும் முன்பே ராமாயணம் என்ற படத்தில் துணை நடிகராக நடித்திருந்தார். ஆனால் பராசக்தி படம் தான் ஒட்டுமொத்த தமிழகத்தையும் சிவாஜி கணேசன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது. அதனை தொடர்ந்து சிவாஜி நடிப்பில் வெளியான அனைத்து படங்களிலும் அவரின் நடிப்பு பாராட்டை பெற்றது.

அழுகை சோகம் சிரிப்பு கோபம் என தனது முகத்தில் நவரசத்தையும் அவ்வளவு த்தரூபமாக வெளிப்படுத்தி மிகவும் எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை தன்வசம் ஈர்த்தவர் தான் சிவாஜி கணேசன். கர்ணன் படத்திலும் சரி வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திலும் சரி இவரது நடிப்பை கண்டு ரசிகர்கள் வியப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டனர்.

இந்நிலையில் தற்போது சிவாஜி கணேசன் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சிவாஜி கணேசன் ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவருக்கும் நடிப்பு சொல்லி தருவாராம். எல்லாருடைய கேரக்டரையும் அவரே நடித்தும் காட்டுவாராம். அந்த வகையில் தில்லானா மோகனாம்பாள் படத்தின்போது பத்மினிக்கே நிறைய காட்சிகள் நடிக்க கற்று கொடுத்தாராம்.

இதை கண்ட டி எஸ் பாலய்யா மிரண்டே விட்டாராம். அந்த அளவிற்கு சிவாஜி தனது நடிப்பால் மிரட்டியுள்ளார். அதனால் தான் இவரை நடிகர் திலகம் என அழைக்கிறார்கள் போல. தற்போது வரை பல நடிகர்கள் சிவாஜியின் இடத்தை பிடிக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் சிவாஜிக்கு நிகர் சிவாஜி தான் அவர் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது.

Trending News