பாடல், சண்டை இல்லாமல் ஹிட் அடித்த சிவாஜி படம்.. முதன் முதலாக தமிழில் வந்த திரில்லர் கதை

sivaji-actor
sivaji-actor

ஒரு படம் வெற்றி பெற பாடல் மற்றும் சண்டை காட்சிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. புதுப்புது நாடுகளுக்கு சென்று பாடல் ஷூட் செய்வது, உயிரை பணையம் வைக்கும் அளவுக்கு இருக்கும் சண்டை காட்சிகள் என இப்போதைய சினிமாக்கள் வேற லெவலில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் அந்த காலத்தில் பாடல் சண்டை எதுவும் இல்லாமல் ஒரு படம் வெற்றி பெற்று இருக்கிறது.

1954 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், பண்டரிபாய் நடிப்பில் வெளிவந்த அந்த நாள் என்கிற திரைப்படம் தான் அது. ஒரு கொலை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திகில் திரைப்படம் அந்த காலத்திலேயே பல சாதனைகள் புரிந்தது. இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் திரில்லர் மற்றும் திகில் கதைகள் வருவது அதிகமாகி விட்டது.

Also read: தேசிய விருது வாங்கிய முதல் 5 தமிழ் படங்கள்.. சிவாஜியை முந்திய எம்ஜிஆர்

ஆனால் அதற்கெல்லாம் முன்னோடி இந்த திரைப்படம் தான். முதன்முதலாக தமிழில் வெளிவந்த இந்த திகில் திரைப்படம் தேசிய விருதையும் தட்டிச் சென்றது. இதற்கு முன் எம்ஜிஆர் நடித்த மலைக்கள்ளன் என்ற திரைப்படம் தான் முதன்முதலாக தமிழில் தேசிய விருது வாங்கிய படம்.

அதைத்தொடர்ந்து இரண்டாவது தேசிய விருது பெற்ற திரைப்படம் இதுதான். இப்படம் பாடல், சண்டை காட்சிகள் என்று எதுவும் இல்லாமல் விறுவிறுப்பாகவும், திகிலோடும் ரசிகர்களை மிரட்டியது. பொதுவாகவே அந்த கால திரைப்படங்களில் ஏகப்பட்ட பாட்டுக்கள் இருக்கும்.

Also read: தமிழில் முதல் முதலாக தேசிய விருது வாங்கிய படம்.. 140 நாட்கள் ஹவுஸ் ஃபுல்லான ஆச்சரியம்

ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை பாடல் காட்சிகள் வந்த திரைப்படங்களும் இருக்கிறது. அப்படி இருந்த காலகட்டத்தில் இந்த திரைப்படம் வித்தியாசமான முயற்சியாக வெளிவந்தது. அது மட்டுமல்லாமல் இப்படத்தில் ஹாலிவுட் டெக்னாலஜிகளையும் பயன்படுத்தி இருக்கின்றனர்.

அதனாலேயே இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் சிவாஜியின் திரை வாழ்வில் இந்த திரைப்படம் முக்கிய படமாக இருக்கிறது. இந்த படத்திற்கு பிறகுதான் இதே பாணியில் பல திரைப்படங்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

Also read: எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு முன்பே சாதனை படைத்த நாயகன்.. தொழில்நுட்பம் இல்லாமலேயே இரட்டை வேடத்தில் நடித்த சுவாரஸ்யம்

Advertisement Amazon Prime Banner