திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

செம டோஸ் விட்ட சிவாஜி.. எவ்வளவு சொல்லியும் கமலை விரட்டிய நடிகர் திலகம்

சாதாரணமாக தமிழ்சினிமாவில் ஒரே படத்தில் இரண்டு ஆளுமைகள் நடித்தால் அந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் சிவாஜி கணேசன், கமலஹாசன் கூட்டணியில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

குறிப்பாக தேவர் மகன் படம் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் வேறு ஒரு கமலஹாசன் படத்தில் சிவாஜிகணேசன் நடிப்பதாக இருந்தது. ஆனால் கமலஹாசன் எவ்வளவோ வற்புறுத்தியும் அந்த படத்தில் சிவாஜி நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம்.

Also Read :பிக் பாஸ் 6 தொகுத்து வழங்க கமல்ஹாசன் கேட்ட சம்பளம்.. கோடியில் புரளும் உலகநாயகன்

அதாவது கமலஹாசனின் திரைவாழ்க்கையில் முக்கியமான படங்களில் ஒன்றான பார்க்கப்படுவது அவ்வை சண்முகி. இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது ரசனைக்கு ஏற்றார்போல எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் ஜெமினி கணேசன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் சிவாஜிகணேசன் நடிப்பதாக இருந்தது.

இதில் மீனாவின் அப்பாவாக ஜெமினிகணேசன் நடித்திருப்பார். மீனாவின் மனதில் இடம் பிடிப்பதற்காக பெண் வேடமிட்டு வரும் கமலஹாசனை ஜெமினி கணேசன் காதலிப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இதனால் சிவாஜி, பெண் வேஷம் போட்ட ஆம்பளையை ஒரு ஆம்பளை எப்படி காதலிக்க முடியும்.

Also Read :கமல், விஜய், கௌதம் வாசுதேவ் மேனன் இணையும் புதிய படம்..பக்காவாக காய் நகர்த்தும் உலகநாயகன்.!

இப்படத்தில் என்னால் நடிக்க முடியாது வேறு நடிகரை பார்த்துக் கொள்ளுங்கள் என செம டோஸ் விட்டுள்ளார் சிவாஜி. ஆனாலும் அவ்வை சண்முகி படப்பிடிப்பு தளத்தில் சிவாஜி கணேசன், கமலஹாசன், கேஎஸ் ரவிக்குமார் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியிருந்தது.

மேலும் சிவாஜி இப்படத்தில் நடிக்க மறுத்த பின்பு ஜெமினி கணேசன் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி இதற்காகவே அச்சு அசலாக பெண் போலவே கெட்ட போட வேண்டுமென கமலஹாசன் வெளிநாட்டிற்கு சென்று டெக்னாலஜி ஆர்டிஸ்ட்களை அழைத்து வந்து மாமி போல் மேக்கப் போட்டிருந்தார்.

Also Read :இந்திய சினிமா வரலாற்றில் அதிக விருது வாங்கிய நடிகர்.. கமலையே திகைக்க வைத்த ஜாம்பவான்

Trending News