வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சென்சார் போர்ட் எதிர்ப்பையும் மீறி வெற்றி கண்ட சிவாஜிகணேசன்.. ஒரே படத்தில் மாபெரும் புகழ் பெற்ற 2 ஜாம்பவான்கள்

Actor Sivaji Ganesan: நாடகத் துறையில் தன் திறமையை வெளிக்காட்டிக் கொண்டிருந்த இவர் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து, அதன் பின் தன் முயற்சியால் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை உருவாக்கிக் கொண்டவர்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

அவ்வாறு இவர் நடிப்பாற்றலுக்கு கிடைத்த வாய்ப்பு தான் பராசக்தி. அதன்பின் பல படங்கள் இவர் நடிப்பில் வெற்றி கண்டது. மேலும் இவரின் படங்களுக்கு போட்டி போட்ட விநியோகஸ்தர்களும் உண்டு. அதைத்தொடர்ந்தே சிவாஜி கணேசனை நடிப்பின் பல்கலைக்கழகம் என்று அழைக்க தொடங்கினர்.

Also Read: சாஃப்ட்வேர் பிசினஸில் பின்னி பெடல் எடுக்கும் 5 நடிகர்கள்.. பிள்ளையார் சுழி போட்ட அரவிந்த்சாமி

மேலும் இவர் மேற்கொண்ட படங்களில் முதன்மை கதாபாத்திரம் அதாவது ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு பெற்றவர். அப்போது உள்ள காலகட்டத்தில் வெளிவர இருக்கும் படங்களை மேற்கொள்ளவே தணிக்கை குழு பாரபட்சம் இன்றி செயல்பட்டதாம்.

அவ்வாறு இருக்க, தன் அறிமுக படமான பராசக்தியில் சிவாஜி மேற்கொண்ட பல காட்சிகளை சென்சார் போர்ட் கட் செய்ததாம். அதை குறித்து பார்க்கையில், கோவில் அர்ச்சகரை முதற்கொண்டு சிவாஜி கணேசன் வசை பாடுவது போல் அமைந்த வசனமே காரணமாக கூறப்படுகிறது.

Also Read: துணிச்சலாக தூக்கி எறிந்த கரிகாலனின் தாலி.. குணசேகரனை விட சொர்ணா அக்காவாக மாறிய ஆதிரை

தமிழ் சினிமாவில் பெரிதும் பேசப்படும் இவரின் அத்தகைய நீண்ட வசனம் பல சென்சார் கட் செய்த பின்னே வெளியாகியதாம். மேலும் அத்தகைய வசனத்தை எழுதிய கவிஞர் தான் கருணாநிதி.

அக்காலகட்டத்தில் கருணாநிதி எழுதிய வசனத்தை கொண்டுதான் படம் வெற்றி அடைந்துள்ளது. இவ்விருவர்களின் முயற்சியில்தான் அந்த வசனத்திற்கு அப்படி ஒரு பெருமையை கிடைத்ததாம். அவ்வாறு கருணாநிதி வசனத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்து மாபெரும் பெயரைப் பெற்று இன்று வரை நிலைத்து நிற்கின்றது.

Also Read: ரஜினியை பார்த்து வளர்ந்து தற்போது எதிர்த்து நிற்கும் 5 ஹீரோக்கள்.. மாமனாரை ஓரம்கட்ட நினைக்கும் தனுஷ்

Trending News