செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

கற்பனைக்கு எட்டாத விஷயத்தை நோக்கி சிவகார்த்திகேயன்.. ஏ ஆர் முருகதாஸ் காட்டில் அடைமழை

தொட்டதெல்லாம் துலங்கும் உச்சத்தில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். மூன்று வருடங்கள் இவர் அருகில் நெருங்க முடியாத அளவிற்கு கடும் பிஸியாக இருக்கிறார். தற்போது ஏ ஆர் முருகதாஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் 80 சதவீதம் முடிந்துவிட்டது.

அமரன் படம் கொடுத்த பிளாக் பாஸ்டர் ஹிட்டால் சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்களுக்கு நல்ல வியாபாரம் காத்துக்கொண்டிருக்கிறது. இப்பொழுது ஏ ஆர் முருகதாஸ் படத்தை வாங்குவதற்கு பலவிநியோகஸ்தர்கள் போட்டி போட்டு வருகிறார்கள்.

அமரன் படம் 120 கோடி பட்ஜெட்டில் எடுத்தனர் ஆனால் அது உலக அளவில் மொத்தமாக 360 கோடிகள் வசூலித்து பட்டையை கிளப்பியது. இந்த படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. இதனால் கமலும் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்.

சிவகார்த்திகேயன் 30 கோடிகள் சம்பளம் வாங்கி வருகிறார். தற்போது முருகதாஸ் படத்தின் வியாபாரத்தை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறார். இந்த படம் எவ்வளவு தூரம் வியாபாரம் ஆகுதோ அதை வைத்து தன்னுடைய சம்பளத்தை உயர்த்த முடிவு செய்துள்ளார்.

ஐம்பதிலிருந்து அறுபது கோடிகள் வரை அவர் சம்பளத்தை உயர்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முருகதாஸ் படத்திற்கு பிறகு புறநானூறு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் முடிந்தவுடன் சிபி சக்கரவர்த்தியுடன் ஒப்பந்தமாகியுள்ளார் இந்த படங்களுக்கு பிறகு அவரது சம்பளத்தை கற்பனைக்கு கூட எட்டாத அளவு உயர்த்தப் போகிறார்.

Trending News