வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

பிரபல நடிகரால் 2 பட வாய்ப்பை இழந்த சிவகார்த்திகேயன்.. இப்ப வரைக்கும் ஒன்னு சேரல

விஜய் டிவியிலிருந்து வந்த பல நட்சத்திரங்கள் தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும், காமெடியங்களாகவும் திகழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் இருந்து வந்த இரண்டு நட்சத்திரங்கள் சந்தானம் மற்றும் சிவகார்த்திகேயன்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பல காமெடி நடிகர்கள் சினிமாவில் நுழைந்தனர். அந்த வகையில் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி தற்போது பிரபலமான காமெடி நடிகராக திகழ்பவர் சந்தானம்.

சந்தானம், சிம்பு நடித்த மன்மதன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு அவருடைய திறமையால் பல பட வாய்ப்புகள் நிறைய குவிந்தது. ஒரு காலகட்டத்தில் சந்தானம் உச்சத்தில் இருந்தார். இவருடைய கால்ஷீட்டுக்காக பல இயக்குனர்கள் காத்திருந்தார்கள்.

அந்த சமயத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நுழைந்தார். அதன்பின்பு சிவகார்த்திகேயன் பல படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

விஜய்டிவியில் இருந்து வந்த சந்தானம், சிவகார்த்திகேயன் இருவரும் ஒரு படத்தில் கூட இணைந்து நடித்ததில்லை. சிவகார்த்திகேயன் படத்தில் சந்தானம் நடிக்க மாட்டேன் என்ற குறிக்கோளுடன் உள்ளாராம். சிவா நடிப்பில் வெளியான யாயா படத்தில் முதலில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்தது.

ஆனால் சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடித்தால் சந்தானம் விலகப் போவதாக சொல்லி இருந்தார். அதனால் யாயா படத்தில் சிவகார்த்திகேயன் பதிலாக சிவா நடித்திருந்தார். அதேபோல் ராஜா ராணி படத்தில் ஜெய்க்கு பதிலாக சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்தது.

ராஜா ராணி படத்தில் சந்தானத்துக்கு ஆர்யாவுடன் தான் காட்சிகள் இருந்தாலும் சிவகார்த்திகேயன் நடித்தால் இப்படத்தில் நடிக்க மாட்டேன் என சொல்லியதால் இப்படத்தில் ஜெய் நடித்திருந்தார் எனக் கூறி வருகின்றனர். ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தற்போது வரை தெரியவில்லை. ஒரே தொலைக்காட்சியில் இருந்து வந்த இவர்கள் இருவரும் ஒன்றாக ஒரு படம் கூட நடிக்காதது ரசிகர்கள் மத்தியில் கவலை அளிக்கிறது.

Trending News