Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் இப்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் பராசக்தி படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
அதேபோல் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்து வரும் 23 வது படத்தின் டைட்டில் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயனின் பிறந்த நாளான இன்று டைட்டில் க்ளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகி உள்ளது.

அதன்படி இப்படத்திற்கு மதராசி என பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 2006 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் இதே தலைப்பில் படம் வெளிவந்திருக்கிறது.
SK 23 ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் க்ளிம்ப்ஸ்
சமீபகாலமாக பழைய பட டைட்டிலில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். வேலைக்காரன் மாவீரன் காக்கிச்சட்டை அமரன் பராசக்தி வரிசையில் மதராஸியும் இணைந்துள்ளது.
மேலும் அனிருத் இசையில் மிரட்டலாக வெளியாகி உள்ள இந்த வீடியோ வேற லெவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நிச்சயம் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளுக்கான தரமான கிப்ட் தான் இது.
இதை அவரின் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த டைட்டில் தற்போது டிவிட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.