வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

விஜய்யின் இடத்தை பிடித்த சிவகார்த்திகேயன்.. அள்ளிக் குவிக்கும் அமரன் 5வது நாள் வசூல்

Amaran 5th Day Collection : இதுவரை பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வந்தவர் தான் தளபதி விஜய். அவர் அரசியலுக்கு செல்வதால் சினிமாவில் ஒரு வெற்றிடம் வரப்போகிறது என்ற பேச்சு போய்க் கொண்டிருந்தது. அதோடு சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

அப்போது தன்னிடம் இருந்த துப்பாக்கியை விஜய் சிவகார்த்திகேயன் இடம் கொடுத்துவிட்டு தனக்கு முக்கியமான வேலை இருப்பதால் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு செல்வார். இதனால் அடுத்த தளபதி சிவகார்த்திகேயன் என்று கூறப்பட்டு வந்தது.

அதேபோல் விஜய் படங்கள் எவ்வாறு அதிக வசூல் செய்யுமோ அதேபோல் சிவகார்த்திகேயனின் அமரன் படமும் வசூலை வாரி குவித்து வருகிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான அமரன் படம் வெளியாகி கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் ஆகிறது.

அமரன் படத்தின் ஐந்தாவது நாள் வசூல்

விடுமுறை நாட்களில் தான் படம் ஏகபோக வசூலை செய்து வந்தது என்று பார்த்தால் நேற்று திங்கட்கிழமை வேலை நாட்களிலும் நல்ல வசூலை பெற்றிருக்கிறது. அதாவது நேற்று மட்டும் கிட்டத்தட்ட 15 கோடி வசூலை அமரன் படம் ஈட்டி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுவரை உலகம் முழுவதும் 165 கோடி வசூலை அமரன் படம் அள்ளி உள்ளது. மேலும் மிக விரைவில் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ வசூலை அறிவிக்க இருக்கிறது. போட்ட பட்ஜெட்டை காட்டிலும் பல மடங்கு லாபம் பார்த்ததால் படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறது.

மேலும் சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமரன் படம் அமைந்திருக்கிறது. இதே ஏறுமுகத்துடன் அடுத்தடுத்த வெற்றி படங்களை சிவகார்த்திகேயன் கொடுத்து வந்தால் கண்டிப்பாக விஜய்யின் இடத்திற்கு சென்று விடுவார் என்று கூறுகின்றனர் சினிமா வட்டாரத்தில் உள்ளவர்கள்.

Trending News