மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போது சிவகார்த்திகேயன் நன்றாகத்தான் இருந்தார். ஆனால் என்னைக்கு படம் தயாரிக்க ஆசைப்பட்டாரோ அன்னைக்கு அவரைப் பிடித்தது ஏழரை சனி.
இப்பவும் கோலிவுட் வட்டாரங்களில் 24am ஸ்டுடியோஸ் நிறுவனம் சிவகார்த்திகேயன் உடையதுதான் எனவும், அவரும் அவருடைய நண்பர் ஆர் டி ராஜாவுடன் இணைந்துதான் அந்த தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்ததாகவும் கூறுகின்றனர்.
அப்படி 24am ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்த சிவகார்த்திகேயன் படங்களான ரெமோ, வேலைக்காரன், சீமராஜா போன்றவை வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றி என்று சொன்னாலும் தயாரிப்பு அடிப்படையில் இந்த படம் பல கோடிகள் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டதாம்.
அதுமட்டுமல்லாமல் இருவரும் மீண்டும் இணைந்து தயாரித்த அயலான் திரைப்படம் நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்து தற்போதுதான் அதற்கொரு விடை கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிட வேண்டியது. வேலைக்காரன் மற்றும் சீமராஜா போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் சிவகார்த்திகேயனுக்கும் அவரது நண்பருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு சிவகார்த்திகேயன் அதிலிருந்து பிரிந்து வந்ததாக தெரிகிறது.
இருந்தாலும் ஆர் டி ராஜா நைசாக தன்னுடைய கடன் சுமையை மொத்தமாக சிவகார்த்திகேயன் தலையில் கட்டிவிட்டதாவும், கிட்டத்தட்ட 84 கோடி கடனில் சிக்கி சின்னாபின்னமானதாகவும் சினிமாவின் மூத்த அறிவுரையாளர் சித்ரா லட்சுமணன் சமீபத்தில் ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வருடங்களாக சிவகார்த்திகேயன் நடித்த படங்களின் அனைத்தும் சம்பளமும் கடன் கட்டவே சரியாக போய் விட்டதாம். தற்போதுதான் அந்த கடன் பிரச்சனையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவதாகவும், இன்னும் சில படங்களில் மொத்த கடன் பிரச்சனைகளும் முடிந்து விடும் எனவும் கூறுகின்றனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அடுத்தடுத்து டாக்டர் மற்றும் டான் போன்ற படங்கள் உருவாகி வருகின்றன.