திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

எங்களுக்கு தோண்டிய குழியில நீயே விழுந்துட்ட.. மேடையில் சிவகார்த்திகேயனை வறுத்தெடுத்த தயாரிப்பாளர்

சினிமாவில் எந்தவித பின்புறமும் இல்லாமல் படிப்படியாக முன்னேறியவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் டாக்டர், டான் போன்ற வெற்றி படங்களை கொடுத்து, அதன் பிறகு சமீபத்தில் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் வெளியான பிரின்ஸ் படத்தினால் பெரிய அடி வாங்கி, அதிலிருந்து மீள்வதற்காக முயற்சி செய்து வருகிறார்.

இருந்த போதிலும் இப்பொழுதும் கோடிக்கணக்கில் சம்பளமும் பெறுகிறார். அத்துடன் பெரிய நடிகர்கள் மாஸ் ஓப்பனிங் வரிசையில் இருக்கிறார் சிவா. ஆனால் ஆரம்பத்தில் சிவாவை வைத்து வைத்து பல தயாரிப்பாளர்கள் படம் எடுத்து நஷ்டம் அடைந்துள்ளனர்.

Also Read: வெற்றி, தோல்வியை தலைக்கு ஏற்றாத சிவகார்த்திகேயன்.. எதிர்பாராத கூட்டணியில் அடுத்த படம்

அவர்களுக்கெல்லாம் ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுக்காமல் இப்பொழுது இவர் தெலுங்கு பக்கம் சென்றுவிட்டார். தெலுங்கு டைரக்டர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் படம் பண்ணி வருகிறார். தன்னை வளர்த்து விட்ட தமிழ் இயக்குனர்களையும் தயாரிப்பாளர்களையும் சிவகார்த்திகேயன் சுத்தமாக கண்டு கொள்ளவில்லை.

இது மிகவும் தவறான ஒன்று. இங்கே இருப்பவர்களுக்கு வழி செய்யாமல் கடனாளி ஆக்கி விட்டு விட்டு அங்கே சென்று சம்பளத்தை வேறு உயர்த்தி விட்டார். இப்படி சிவகார்த்திகேயன் மனசாட்சி இல்லாமல் நடந்து கொள்கிறார் என்று அவர் மீது குற்றம் சாட்டுகின்றனர்.

Also Read: சிவகார்த்திகேயனை தட்டிக் கொடுத்து காப்பாற்றிவிட்டு லோகேஷ்.. கண்டிப்பா சக்சஸ் தான் பண்ணுங்க பாஸ்!

இப்போது சிவகார்த்திகேயன் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். பிரின்ஸ் படத்தின் தோல்வியை ரசிகர்கள் மறக்கும் அளவிற்கு தரமான வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறார்.

இந்தப் படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் தெலுங்கு படங்களுக்கும், தெலுங்கு இயக்குனர், தயாரிப்பாளர்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதை விட்டுவிட்டு, அவர் தலையிலேயே அவரே மண்ண வாரி போட்டுக்காமல் அடுத்து நிச்சயம் தமிழில் சூப்பர் ஹிட் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழ் இயக்குனர்களையும் தயாரிப்பாளர்களையும் ஆதரிக்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் உட்பட பலரும் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.

Also Read: பிரின்ஸ் பட தோல்விக்கு இதுதான் காரணம்.. கூட இருந்தே குழிப்பறித்த சம்பவம்

Trending News