சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் உருவான திரைப்படம் டான். கல்லூரி வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் படத்தில் சிவகார்த்திகேயன் காமெடி, சென்டிமென்ட் காட்சிகள் என அனைத்திலும் சிறப்பாக நடித்துள்ளார்.
டாக்டர் படத்தில் இணைந்த பிரியங்கா மோகன் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஆனால் டான் படத்தில் பிரியங்கா மோகனுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லாமல் இருந்தாலும் கிடைக்கும் சில காட்சிகளை சரிவர பயன்படுத்தியுள்ளார். இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
அதுவும் சமுத்திரகனியின் அப்பா கதாபாத்திரம் அனைவரது கண்களையும் கண்கலங்க வைத்தது. அந்த அளவிற்கு தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல் எஸ் ஜே சூர்யா தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இப்படத்தில் தனது நடிப்பு திறமையை மீண்டும் நிரூபித்து உள்ளார்.
டான் படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆன நிலையில் தற்போது இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 34.50 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. முதல் மூன்று நாட்களிலேயே அதிக வசூல் செய்துள்ளதால் இப்படம் கூடிய விரைவில் 100 கோடி வசூலில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களிடம் டான் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் தற்போது இப்படத்திற்கு எதிர்மறையான கருத்துக்களும் பதிவாகி வருகிறது.
டான் படத்தில் சிவகார்த்திகேயன் ஆசிரியர்களை மதிக்காத ஒரு மாணவனாக நடந்து கொள்வார். மேலும் அவர்களை தனது கண்ட்ரோல் கொண்டுவர திட்டம் போடுவார். இந்த மாதிரியான காட்சிகள் இடம் பெற்றால் தான் சமீப காலமாக மாணவர்கள் யாரும் ஆசிரியருக்கு சுத்தமாக மதிப்பு தருவதில்லை வகுப்பறையில் நடனமாடுவது மற்றும் கேவலமாகப் பேசுவது போன்ற செயலில் ஈடுபடுகின்றனர் என பலரும் கூறி வருகின்றனர்.