வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விலை போகாத படங்களை நேக்காக தள்ளிவிடும் சிவகார்த்திகேயன்.. பிரின்ஸ் படத்தில் பலிக்காமல் போன பாட்சா

வளர்ந்து வரும் நடிகராக இருந்த சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த வெற்றிகளின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இடத்தை பிடித்தார். அவரின் நடிப்பில் வெளிவந்த டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் 100 கோடி அளவுக்கு வசூலித்து சாதனை படைத்தது. இதனால் சிவகார்த்திகேயன் பாக்ஸ் ஆபிஸ் நாயகர்களில் ஒருவராக முன்னேறினார்.

ஆரம்பத்தில் சாதாரண நடிகராக மட்டுமே பார்க்கப்பட்டு வந்த இவர் தற்போது முன்னணி நடிகர்களுக்கே சவால் விடும் நாயகனாக மாறி இருக்கிறார். மேலும் திரை உலகில் இவருடைய இமேஜும் கொஞ்சம் கொஞ்சமாக ஏற ஆரம்பித்தது. ரசிகர்களும் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்தனர்.

Also read:சிவகார்த்திகேயனிடம் தூக்கியது போல பிரபல சேனலை வாங்கிய உதயநிதி.. எதையும் விட்டு வைப்பதா இல்ல!

அதனாலேயே இவர் நடிப்பில் உருவான பிரின்ஸ் திரைப்படத்திற்கு எக்கசக்கமாக எதிர்பார்ப்பு இருந்தது. இந்த தீபாவளிக்கு வெளியான இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இப்படி ஒரு மோசமான தோல்வியை இந்த படம் சந்திக்கும் என்று சிவகார்த்திகேயன் நிச்சயமாக எதிர்பார்த்திருக்க மாட்டார். அந்த அளவுக்கு இந்த படம் பல நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தது.

இதனால் உச்சாணிக்கொம்பில் இருந்த சிவகார்த்திகேயனின் மார்க்கெட் தற்போது அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. இருப்பினும் தன்னுடைய அடுத்தடுத்த திரைப்படங்களின் மூலம் மீண்டும் தன்னுடைய வெற்றியை தக்க வைத்துக் கொள்வதற்காக அவர் தற்போது முழு வீச்சில் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான திரைப்படங்கள் எப்படி இந்த அளவுக்கு வெற்றி பெறுகிறது என்பதற்கான காரணமும் தெரியவந்துள்ளது.

Also read:பிரின்ஸ் பட தோல்விக்கு முக்கியமான ஐந்து காரணங்கள்.. சமந்தாவைப் போல் இயக்குனருக்கு வந்த அரிய வகை நோய்

அதாவது சிவகார்த்திகேயன் நடித்த சில திரைப்படங்கள் விலை போகாமல் இருந்தால் அவர் சில யுக்திகளை பயன்படுத்துவாராம். அதாவது அந்த திரைப்படங்கள் தொடர்ச்சியாக விடுமுறை வரும் நாட்களில் வெளியாவது போன்று பிளான் செய்வாராம். அதேபோன்று அவரின் படங்கள் வெளியாகும் சமயத்தில் முன்னணி நடிகர்கள், போட்டி நடிகர்கள் ஆகியவர்களின் படங்கள் வெளிவராமல் பார்த்துக் கொள்வாராம்.

மேலும் அவரின் விலை போகாத படங்களையும் வெற்றி பெற வைக்க பிரம்மாண்டமாக ப்ரமோஷன்களும் செய்யப்படும். இப்படி பக்காவாக திட்டம் போட்டு ஒவ்வொரு திரைப்படங்களையும் வெற்றி பெற வைத்த சிவகார்த்திகேயனுக்கு பிரின்ஸ் திரைப்படம் பலத்த அடியை கொடுத்து விட்டது. அந்த வகையில் அவருடைய பாட்சா பிரின்ஸ் படத்தில் பலிக்கவில்லை என்று கோலிவுட் வட்டாரத்தில் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.

Also read:பிரின்ஸ் பட தோல்வியால் மாவீரன் படத்திற்கு என்ன ஆச்சு? பரிதவிக்கும் சிவகார்த்திகேயன்

Trending News