புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஒரு வாரம் கடந்தும் குறையாத அமரன் வசூல்.. பண மழையில் கமல்

Amaran One Week Collection: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியானது. இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வாரம் கடந்த நிலையிலும் இப்போதும் தியேட்டரில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் படத்தின் திரைக்கதை மற்றும் இயக்கம் தான்.

மேஜர் முகுந்த் வரதராஜனின் நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்தை கொடுத்திருந்தார். அமரன் படத்தின் மூலம் ராணுவ அதிகாரிகள் மீது இருக்கும் மதிப்பு இன்னும் கூடுதலாகி இருக்கிறது.

இந்த சூழலில் முதல் நாளே கிட்டத்தட்ட 42 கோடி வசூலை அமரன் படம் பெற்றது. அடுத்தடுத்த நாட்களிலும் படத்தின் வசூல் அதிகமாகி கொண்டிருந்தது. அதன்படி இரண்டாவது நாள் 31 கோடி, மூன்றாவது நாள் 37 கோடி உலகம் முழுவதும் வசூல் செய்தது.

அமரன் படத்தின் ஒரு வார வசூல்

அதன்படி நேற்று உலகம் முழுவதும் ஏழாவது நாள் முடிவில் 10 கோடி வசூலை அமரன் பெற்றிருக்கிறது. இதுவரையிலும் கிட்டத்தட்ட 177.35 கோடி வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 80 கோடியும், கேரளாவில் 5.6 கோடியும் வசூலை ஈட்டி உள்ளது.

கர்நாடகாவில் 9.85 மற்றும் தெலுங்கானாவில் 19.55 கோடியும் வசூல் பெற்றுள்ளது. இவ்வாறு தொடர்ந்து நல்ல வசூலை பெற்று வருவதால் மிகப் விரைவில் 200 கோடி கிளப்பில் சிவகார்த்திகேயனின் அமரன் படம் இணைய இருக்கிறது.

அதுவும் சிவகார்த்திகேயன் கேரியரில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை அமரன் படம் அடைய இருக்கிறது. மேலும் இப்படத்தின் வசூல் மழையால் கமல் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். படக்குழுவுக்கு பரிசுகளை வாரி வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News