வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சிவகார்த்திகேயனை சுற்றி வளைத்த ஏழரை.. அமரன் பட ரிலீஸ் ஆகுமா? ஓப்பனாக கொட்டி தீர்த்த பிரபலம்

சிவகார்த்திகேயனுக்கு பல கோடி கடன் இருப்பதாக பிரபல சினிமா விமர்சகர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரையில் ஆங்கராக இருந்து அதில் மக்களை கவர்ந்து, அதிலிருந்து பெரிய திரைக்கு வந்தவர் சிவகார்த்திகேயன்.

இவர் மெரினா படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி, அதன்பின், 3, வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கிச் சட்டை, வேலைக்காரன், பிரின்ஸ், அயலான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்பட ஷுட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அமரன்

இந்த நிலையில், சிவா, சாய்பல்லவி, பவண் அரோரா ஆகியோர் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்அர் நேசனல் தயாரிப்பில், ஜிவி.பிரகாஷ்குமார் இசையில் உருவாகியுள்ளா படம் அமரன். இப்படம் ரூ.200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட, வரும் அக்டோபர் 31 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் கடந்த 18 ஆம் தேதி நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மணிரத்னம் ஆகியோர் பங்கேற்றனர். இப்படத்தின் புரமோசன் பணிகள் மலேசியா, சிங்கப்பூர், துபாய், அமெரிக்கா என உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் நடந்து வரும் நிலையில் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு அமரன் படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு குவிந்துள்ள நிலையில் இப்படத்தைப் பார்த்த கமல்ஹாசன் கையில் டிஸ்யூ பேப்பர் வைத்துக் கொண்டே அழுதுகொண்டே பார்த்ததாகவும், இப்படத்தின் திரைக்கதை மற்றும் காட்சி, நடிகர்களின் நடிப்பு தத்ரூபமாக இருந்ததாக தகவல் வெளியானது. இதனால் ரசிகர்களும் இப்படத்தைப் பார்க்க ஆவலுடன் உள்ளனர்.

இந்த நிலையில், குறுகிய காலத்தில் சினிமாவில் வளர்ந்த சிவாவுக்கு பாராட்டுகள் குவிந்து வந்தாலும், அவர் மீதான சர்ச்சைகளும் ஓயவில்லை. அது இமானின் முன்னாள் மனைவி விவகாரத்தில் இருந்து இன்னும் மீடியாக்களில் சூடுபிடித்தன. இந்த நிலையில், சிவா கடனில் சிக்கி தவிப்பதாக சில ஆண்டுகளாகவே கூறப்பட்டு வந்த நிலையில் இதுகுறித்து பிரபல சினிமா விமர்சகர் கருத்து தெரிவித்துள்ளார்.

கடன் பிரச்சனையில் சிவகார்த்திகேயன்?

சினிமா விமர்சகர் அந்தணன் கூறியதாவது: அமரன் படம் சொன்ன பட்ஜெட்டை தாண்டி அதிகம் செலவாகியுள்ள நிலையில் இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுபற்றிய பேச்சுவார்த்தை எழுந்தபோது. அவர்களுக்குள் பைனல் பண்ணி உள்ளனர். எனவே பட்ஜெட்டை தாண்டி அதிக செலவானதற்கு சிவா எதோ பேசியுள்ளதாகவும் இதற்கு படம் ரிலீஸுக்கு பின் கொஞ்சம் செட்டில் பண்ணறதா கூறியதாக சொல்லப்படுகிறது.

சிவாவை பிரச்சனைகள் விரட்டிக் கொண்டே இருக்கும். அவர் வேறு ஒருவரை பினாமியாக போட்டு படமெடுப்பது விநியோகஸ்தர்களுக்கு தெரியும். அமரன் படத்தின் வெளியீட்டில் அவர் வாங்கிய கடனுக்காக யாரும் தொந்தரவு செய்யப்போவதில்லை. அவரே இதில் சம்பளம் வாங்கிக் கொண்டுதான் நடித்திருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன் சிவா நடித்த படங்கள் தோல்வியடைந்ததால் அவருக்கு ரூ.75 கோடிக்கு மேல் கடன் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவர் பிரபல தயாரிப்பாளரிடம் இருந்து விலகினார். அதன்பின், பிரபல தயாரிப்பு நிறுவனத்தில் 2 படம் சம்பளம் வாங்காமல் நடித்து அதில் கொஞ்சம் கடனை அடைத்துவிட்டு மீண்டதாக தகவல் வெளியானது. ஆனால் அதன் பிறகும் சிவா சொந்தக் காசில் படமெடுத்து அதுவும் ஓடாததால்தான் அவர் ரூ.90 கோடி அளவில் கடனில் சிக்கியிருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Trending News