ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

முருகதாஸால் சிவகார்த்திகேயனுக்கு வந்த நெருக்கடி.. பொறாமையில் பாலிவுட் சிங்கம்

Sivakarthikeyan and AR Murugadoss’ SK 23 movie which is fast proceed : தமிழ் சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடும் நடிகராக தனி பெரும்பான்மையுடன் முன்னேறி வருகிறார் சிவகார்த்திகேயன்.

ஆனால் இவருக்கு ஆப்பு எங்கிருந்து? எப்போது? யார் மூலமாக? வரும் என்றே தெரியாத வண்ணம் வருவது தான் இவரது துரதிஷ்டம்.பல வருடங்களாக போராடி உருவாக்கிய அயலானை, இப்போதுதான் ரிலீஸ் செய்து ஒருவாறு பெருமூச்சு விட்ட நிலையில், அடுத்த ஆப்பு அமரன் வடிவில் ரெடியாகி வந்தது. 

சமீபத்தில் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு ராஜ்கமல் பிலிம்ஸ் தான் தயாரிக்கும் SK21ன் டீசரையும், படத்தின் டைட்டிலையும் வெளியிட்டது.

எப்போது வரும் என காத்து கிடந்தது போல் பிரச்சனை பண்ண ஆரம்பித்தனர் சிவகார்த்திகேயனின் நல விரும்பிகள். படத்தின் காட்சிகள் தவறாக உள்ளது, தவறாக பேசுகிறார் என பல தவறுகளை சுட்டிக்காட்டி ரிலீஸ் செய்ய விட மாட்டோம் என்று கொடி பிடித்தனர் அமரன் பட ஆர்வலர்கள். 

ஒரு வழியாக அனைத்தையும் சரி செய்து, ரிலீஸ் செய்தியை லாக் செய்தார் கமல். இன்னமும் படப்பிடிப்பு நிறைவடையாது, சிவகார்த்திகேயனின் கால் சீட் முப்பது நாள் இருக்கும் நிலையில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் அடுத்த படத்தை ஒப்புக் கொண்டார் சிவகார்த்திகேயன். 

கன்னட பட நடிகை ருக்மணி வசந்த் உடன் இணையும் சிவகார்த்திகேயன் வழக்கம்போல் காமெடி, கலாட்டா என எதுவும் பண்ணாமல் ஒரு சீரியசான கேரக்டரில் கமிட் ஆகி உள்ளாராம். இதில் இவருக்கென தனி பயிற்சியாளரை நியமித்து அவரது வழிகாட்டுதலின் படியே நடிக்க உள்ளாராம் சிவா.

சமீபத்தில் SK 23 என பெயரிடப்பட்ட இத்திரைப்படம், கடகடவென  சூட்டிங் தொடங்கப்பட்டு முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் முடித்து உள்ளது. 

பாலிவுட் நடிகர் சல்மான்கான் உடன் இணையும் ஏஆர் முருகதாஸ்

அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக புதுச்சேரி செல்ல உள்ளது இந்த குழு. ஏன் இந்த அவசரம் என்று இயக்குனரை கேட்டால் அடுத்ததாக பாலிவுட் சிங்கம் சல்மான்கானை வைத்து படம் இயக்கப் போவதாக கூறி வருகிறார். 

உண்மைதான் சல்மான்கான், அவரது வலைதள பக்கத்தில் “ஏ ஆர் முருகதாஸ் திறமையான இயக்குனர், எங்களின் இந்த இணைப்பு பிரத்தியேகமானது, முருகதாஸின் இயக்கத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டு உள்ளார். 

நம் இயக்குனர்களின் அருமை தமிழ் நடிகர்களுக்கு புரிகிறதோ! இல்லையோ! பாலிவுட் நட்சத்திரங்கள் நம் இயக்குனர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர். திக்கெட்டும் பரவுகிறது நம் தமிழனின் பெருமை!

Trending News