வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

தனுஷை வெறுப்பேற்றும் நயன்தாரா-எஸ்கே.. ரொம்ப ஓவரா போறீங்க பாஸ்!

Nayanthara: நடிகர் தனுஷ் கோலிவுட் சினிமாவின் முக்கிய நடிகராக இருந்தாலும் அவரை சுற்றி நடக்கும் சர்ச்சை செய்திகளை படிக்கும் போது நமக்கே தலை சுற்றுகிறது. கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் என்ன நடந்தாலும் அதனுடன் தனுஷ் பெயர் சேராமல் இருக்கவே இல்லை.

போதாத குறைக்கு மூன்று செகண்ட் வீடியோவுக்கு என்கிட்ட பத்து கோடி பணம் கேட்கிறார் என்று நயன்தாரா நாலு பக்க அறிக்கையை விட்டார். அது மட்டும் இல்லாமல் நீங்கள் அப்பா மற்றும் அண்ணன் இரவில் வந்தவர், அடுத்தவர் துன்பத்தை பார்த்து சந்தோஷம் அடைபவர் என ஏகத்துக்கும் வசைப்பாடி இருக்கிறார்.

ரொம்ப ஓவரா போறீங்க பாஸ்!

அதுவும் போதாது என்று நேற்று நான் உங்கள் படங்களில் வீடியோவை உபயோகப்படுத்துவதற்கு எந்த தயக்கமும் இல்லாமல் ஓகே சொன்ன தயாரிப்பாளர்களுக்கு நன்றி என மூன்று பக்க அறிக்கை வேறு. அதுக்கும் மேலாக இன்று ஒரு சம்பவத்தை செய்திருக்கிறார்.

அதாவது எதிரிக்கு எதிரே நண்பன் என்று ஒரு பழமொழி இருக்குது. அந்த மாதிரி தனுஷுக்கு எதிரிகள் எல்லாம் என்னுடைய நண்பர்கள் தான் என்ற மாதிரி இன்னைக்கு நடந்த கல்யாண பங்க்ஷன் ஒன்றில் நயன்தாரா மற்றும் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் ஏன் தனுஷுக்கு எதிரி என்று எல்லோருக்குமே தெரியும். இவர்களுடைய பஞ்சாயத்து எல்லாம் வளர்த்த கிடா மார்பில் பாய்கிறது என்ற கதை தான். தனுஷ் நடித்துக் கொண்டிருக்கும் இட்லி கடை படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் கல்யாணத்தில் தான் சிவா மற்றும் நயன்தாரா கலந்து கொண்டிருக்கிறார்கள்.

இதில் சோகம் என்னவென்றால் இன்று தான் நடிகர் தனுஷின் விவாகரத்து வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று அவர் தன்னுடைய மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை அதிகாரப்பூர்வமாக பிரிவதும் உறுதியாக இருக்கிறது.

Trending News