தமிழ் சினிமா பொறுத்தவரை ரசிகர்கள் எப்போதுமே நடிகர்களுக்கு முதலில் ஆதரவு கொடுப்பார்கள். பின்பு தொடர்ந்து இரண்டு நடிகர்கள் படங்கள் வெளியானால் உடனே இவர்கள் இருவர்தான் போட்டியாளர்கள் என நினைத்துக்கொள்வார்கள்.
அப்படி ஆரம்ப காலத்தில் சிவகார்த்திகேயன் பெரிய அளவு வெற்றி படங்கள் எதுவும் கொடுக்காததால் ரசிகர்கள் பெரிதாக அவரை எடுத்துக்கொள்ளாமல் விட்டனர்.
ஆனால் காலப்போக்கில் அடுத்தடுத்த படங்கள் வெற்றிபெற அதனுடன் விஜய்சேதுபதி படமும் ஒரே சமயத்தில் வெளியிட இவர்களிருவரும் போட்டியாளர்கள் என ரசிகர்களை ஒத்துக் கொண்டனர்.

தற்போது திரைத்துறையில் நண்பர்கள் என கூறிக்கொள்ளும் இவர்கள் படம் வெளியாகும் போகும்போது மட்டும் நண்பன் என்ற வார்த்தை ஓரம் தள்ளிவிட்டு போட்டியாளர் என்ற வார்த்தையை மனதில் வைத்துக் கொள்கின்றனர்.
அந்தவகையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் அப்போது ரிலீசாக போகுது, இப்போது ரிலீசாக போகுது என ரசிகர்களை ஏமாற்றி வரும் நிலையில் தற்போது என்ன செய்வது என தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
விஜய் சேதுபதி வரிசையாக 5 படம் வெளிவரவுள்ளது. அதாவது மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர், லாபம், கடைசி விவசாயி, துக்ளக் தர்பார் போன்ற படங்கள் வெளிவர உள்ளன.
ஆனால் விஜய் சேதுபதி தியேட்டர்களில் 50 சதவீத ரசிகர்கள் மட்டுமே பார்க்க முடியும் என்பதால் படத்தை எடுத்த தயாரிப்பாளர் நஷ்டம் அடையக் கூடாது என்பதால் OTT தளத்தில் லாபம் படத்தை விற்க முடிவெடுத்துள்ளார்.
இதனை பார்த்த சிவகார்த்திகேயன் சும்மா இருப்பாரா அவர் மட்டும்தான் புத்திசாலித்தனமாக செயல் படுவாரா நானும் புத்திசாலிதான் என பல நாட்களாக ஏமாற்றிக் கொண்டிருக்கும் டாக்டர் திரைப்படத்தை OTT தளத்தில் வெளியிட முடிவு எடுத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் எனக்கு எப்போதுமே போட்டி அவர்தான் எனவும் தியேட்டரில் படம் வந்தால் தியேட்டரில் போட்டுவிடுவேன், OTT வெளியானால் OTT போட்டி போடுவேன் என களத்தில் இறங்கியுள்ளார் சிவகார்த்திகேயன். ஒருபக்கம் தைரியமாக பேசினாலும் மறுபக்கம் வடிவேல் போல் மனதிற்குள் அழுவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.