புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

பிரேம்ஜியிடம் மன்றாட மன்னிப்பு கேட்ட சிவகார்த்திகேயன்.. இதைச் செய்யும்போது கொஞ்சம் பார்த்து செய்யலாம்ல்ல

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான டான் படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது. இப்படம் 100 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளது. இதனால் தற்போது சிவகார்த்திகேயனின் மார்க்கெட் உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் எஸ்கே 20 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்குகிறார். மேலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரேன் நாட்டு மாடல் அழகி மரியா நடித்து வருகிறார்.

இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சத்யராஜும் நடித்து வருகிறார். அதேபோல் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இப்படத்தில் பிரேம்ஜி நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் இப்படத்தின் பக்கத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருந்தார்.

பிரின்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு படத்தின் இயக்குனர், நடிகர்கள், தயாரிப்பாளர் என அனைவரையும் சிவகார்த்திகேயன் டேக் செய்திருந்தார். அதில் பிரேம்ஜியின் பெயரை தவறாக டேக் செய்து இருந்தார்.

அதைப்பார்த்த பிரேம்ஜி, சார் என் பெயரை தவறாக டைப் செய்துள்ளீர்கள் என்று கமெண்ட் செய்துள்ளார். அதற்கு சிவகார்த்திகேயன் சாரி சார், அடுத்த முறை கண்டிப்பாக சரியாக டேக் செய்கிறேன் என பதிலளித்துள்ளார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் பிரேம்ஜியின் அண்ணன் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் அடுத்த படத்தில் இணையுள்ளார்.

Sivakarthikeyan

அதாவது வெங்கட் பிரபுவின் எல்லா படங்களிலுமே பிரேம்ஜி நடித்திருக்கிறார். அதனால் கண்டிப்பாக சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு கூட்டணியில் உருவாகும் படத்தில் பிரேம்ஜி இடம் பெறுவார். அதை சூசகமாக தான் சிவகார்த்திகேயன் அடுத்த முறை கண்டிப்பாக சரியாகக் செய்கிறேன் என பதிலளித்துள்ளார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Trending News