Sivakarthikeyan – நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அமரன் படம் பெரிய அளவில் கைகொடுத்து உள்ளது. இந்த படம் அவரது மார்க்கெட்டை எங்கோ கொண்டு போயி நிறுத்திவிட்டது என்றே கூறலாம். அமரன் படத்தில் சிவகார்த்திகேயனின் சம்பளம் மற்றும் ஷேர் என்று மொத்தமாக 75 கோடியை பெற்றுள்ளார். இதை தொடர்ந்து தனது அடுத்த படங்களுக்கும் அதே சம்பளத்தை கேட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.
75 கோடி என்ற சம்பளத்தை கேட்ட உடன், தயாரிப்பாளர்கள் தலை சுற்றி விழாத குறை தான். அது எப்படி அவ்வளவு தரமுடியும்? நீங்க உங்கள் வழக்கமான சம்பளத்தை வாங்கி கொள்ளுங்கள்.. படத்தின் வசூலில் ஷேர் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர்.
அதற்க்கு ஓகே என்று சிவகார்த்திகேயன் சொன்னாலும், இவர் நடிக்கும் அடுத்த படமும் வெற்றி அடைந்து, இதே அளவிலான தொகை சிவகார்த்திகேயனுக்கு கிடைத்தால் நிச்சயமாக அடுத்த தளபதி சிவகார்த்திகேயன் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
100 கோடி சம்பளம் வாங்கப்போகும் சிவகார்த்திகேயன்
அதுமட்டுமல்ல, அடுத்த ரெண்டு படத்தில் 100 கோடி சாம்பலாமாக கேட்க கூட வாய்ப்பு இருக்கிறது. அப்படி கேட்டால், அஜித்துக்கு போட்டியாக, அவருக்கு நிகராக சிவகார்த்திகேயன் வந்துவிடுவார்.
இதுவரை அஜித்தின் படங்கள் டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கு 60 கோடி லாபம் பெற்று கொடுத்துள்ளது. அதே அளவுக்கு சிவகார்த்திகேயனின் அமரன் படமும் கொடுத்துள்ளது.
அதனால், அஜித்-க்கு போட்டியாக குட்டி தளபதி அவதாரம் எடுக்க போவது சிவகார்த்திகேயன் தான் என்று இப்போதே சினிமா வட்டாரத்தில் பேசி வருகிறார்கள். இந்த பேச்சுக்கள் எல்லாம் மெய்யாக்க கடுமையாக உழைப்பை போட்டு வருகிறார் சிவகார்த்திகேயன்.