ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2025

ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் செய்ய போகும் சம்பவம்.. ரஜினி கொடுத்த அந்த வாய்ப்பு

ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் அண்ணாத்த. ஆனால் அந்தப் படம் இவருக்கு மற்ற படங்கள் மாதிரி வெற்றி படமாக அமையவில்லை. அதனால் வெற்றி படத்தை கொடுத்தாக வேண்டும் என்ற நோக்கத்துடன் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இவர் சிறைத்துறை உயர் அதிகாரி கேரக்டரில் நடிக்கிறார்.

இந்த படத்திற்காக அவரது ஸ்டைலில் சும்மா பறந்து பறந்து வேலை பார்த்து வருகிறார். பொதுவாகவே இவருடைய எனர்ஜி லெவல் எந்த அளவுக்கு இருக்கும் என்று அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் இந்த படத்தில் கூடுதலாகவே சூட்டிங் ஸ்பாட்டில் மற்றவர்களை ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு ஒவ்வொன்றையும் செய்திருக்கிறார்.

Also read: அல்லோலப்படும் வாரிசு படக்குழு.. ஜெயிலர் படத்திற்கு நெல்சன் போட்ட கண்டிஷன்

ஆனால் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போவதாக கூறப்பட்டது.  ஆனால் ரஜினி, அவர் நடிக்க வேண்டாம் இது முழுக்க முழுக்க என்னுடைய பாணியிலே இருக்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். மேலும் நெல்சன் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் பங்கு கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார்.

அதற்காக சிவகார்த்திகேயன் இடம் இந்த படத்தில் நீங்க நடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை அதற்கு மாறாக ஒரு பாட்டு எழுத வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இதனை கேட்ட இவர் ரஜினி படத்தில் நான் பாட்டு எழுதுவதற்கு கொடுத்து வைக்க வேண்டும். அதனால் நான் கண்டிப்பாக பண்ணுகிறேன் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.

Also read: தோல்வி பயத்தை காட்டிடாத நெல்சா.. ஜெயிலர் படத்தில் இறங்கிய அடுத்த பாலிவுட் நடிகர்

ஏற்கனவே நெல்சன் கேட்டுக் கொண்டதால் விஜய்க்காக பீஸ்ட் படத்தில் அரபிக் குத்து சாங் எழுதி இருப்பார். அந்த பாடல் பெரிய அளவில் ஹிட் ஆகி பட்டி தொட்டி எல்லாம் பறந்தது. அதே மாதிரி ஜெயிலர் படத்திலும் ரஜினிக்காக எழுதக்கூடிய பாடல் கண்டிப்பாக ஹிட் சாங் ஆக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

மேலும் இந்தப் பாட்டுக்காக சிவகார்த்திகேயன் பெற்ற சன்மானத்தை கூட இவரது பெயரில் வாங்க வில்லையாம். அதற்கு மாறாக மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவரின் பெயரில் காசோலை வாங்கி இருக்கிறார். மேலும் அதை அந்த குடும்பத்திற்காக அர்ப்பணித்திருக்கிறார்.

Also read: 3 சூப்பர் ஸ்டார்கள் உடன் உருவாகும் ஜெயிலர்.. உறுதி செய்த சன் பிக்சர்ஸ்

Trending News