வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

நண்பனுக்கே வேட்டு வைத்த சிவகார்த்திகேயன்.. வெங்கட் பிரபு சோலியையும் முடித்து விட்ட டான்

சிவகார்த்திகேயன் லைன் அப்பில் அடுத்தடுத்த படங்கள் குவிந்து கிடக்கிறது. கடைசியாக இந்த வருட ஆரம்பம் தைத்திருநாளன்று அவருக்கு அயலான் படம் வெளியானது. கடைசியாக வெங்கட் பிரபுவின் கோட் படத்தில் தலை காட்டி விட்டு சென்றார்.

இம்மாத இறுதியில் தீபாவளி அன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் வெளியாக இருக்கிறது. இப்பொழுது ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்த பிறகு டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்திக்கு கால் சீட் கொடுத்திருந்தார்.

இப்பொழுது ஏ ஆர் முருகதாஸ் படத்தை முடித்த பிறகு புறநானூறு படம் பண்ணும் ஐடியாவில் இருக்கிறார். ஏ ஆர் முருகதாஸ், சுதா கோங்காரா என்னும் பெரிய பெரிய இயக்குனர்களின் படங்களை பண்ணுவதால் அவரது மார்க்கெட் இன்னும் உயர பறக்கும் என திட்டம் போட்டு வருகிறார்.

சிபி சக்கரவர்த்தியை ரஜினி அழைத்து ஒரு படம் பண்ணுவதாக இருந்தார். ஆனால் அது கைவிடப்பட்டது. சிவகார்த்திகேயன் மற்றும் சிபி இருவரும் நெருங்கிய நண்பர்கள். ரஜினி படம் ட்ராப்பான கையோடு சிவகார்த்திகேயன்நண்பன் சிபிக்கு ஒரு படம் பண்ணுவதாக அறிவித்தார். இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பதாக இருந்தது.

வெங்கட் பிரபு சோலியையும் முடித்து விட்ட டான்

இப்பொழுது பெரிய பெரிய படங்கள் கைவசம் இருப்பதால் நண்பன் சிபி சக்கரவர்த்திக்கு அல்வா கொடுத்துவிட்டார். முருகதாஸ் படத்திற்கு பிறகு புறநானூறு அதன் பின்னர் தான் சிபி படம் என்று கூறிவிட்டாராம். இது ஒரு புறம் இருக்க வெங்கட் பிரபு வேறு சிவாவிற்காக காத்துக் கொண்டிருக்கிறார். எப்படி பார்த்தாலும் இரண்டு வருடம் வெங்கட் பிரபு காத்து தான் கிடக்கணும் போல்.

Trending News