திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

2025 சம்பவத்திற்கு தயாராகும் SK.. விஜய் இடத்தை பிடிக்க தீயா வேலை செய்யும் அமரன்

Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் சாய் பல்லவி கெமிஸ்ட்ரியில் வெளிவந்த அமரன் பலத்த வரவேற்பை பெற்று வெற்றிவாகை சூடி இருக்கிறது. நாளுக்கு நாள் படத்திற்கு பெருகிய ஆதரவில் வசூலும் 320 கோடியை தாண்டி விட்டது.

இதனால் பூரிப்பில் இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது அடுத்தடுத்த ப்ராஜெக்ட்டுகளில் பிஸியாகி விட்டார். தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இவர் நடித்து வருகிறார். இப்படத்தின் அறிவிப்பு வெளிவந்த நிலையில் அடுத்த அப்டேட் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில் அடுத்த வருடம் முழுவதும் சிவகார்த்திகேயனின் சம்பவமாகத்தான் இருக்கப் போகிறது. அதன் படி புத்தாண்டு தினத்தில் ஏ ஆர் முருகதாஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவர உள்ளது.

அதேபோல் படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளிவர இருக்கிறது. அதாவது ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்து விட வேண்டும் என திட்டமிடப்பட்டிருக்கிறது.

இதை அடுத்து சிவகார்த்திகேயன் டான் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார். இந்த மாத இறுதியில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சிவகார்த்திகேயன் பிறந்த நாளான பிப்ரவரி 17 வெளியாக உள்ளது.

சிவகார்த்திகேயன் லைன் அப்பில் உள்ள படங்கள்

இந்தப் படத்தை முடித்துவிட்டு தான் அவர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகும் புறநானூறு படப்பிடிப்பில் பங்கேற்கிறார். முன்னதாக சூர்யா நடிக்க இருந்த நிலையில் சில காரணங்களால் எஸ்கே இந்த ப்ராஜெக்ட்டுக்குள் வந்துள்ளார்.

இதில் மற்றொரு கேரக்டரில் நடிக்க ஜெயம் ரவியிடம் பேசப்பட்டது. ஆனால் அவர் பல படங்களில் கமிட் ஆகி இருந்த காரணத்தால் அதர்வா நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால் இது எதுவும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இப்படியாக அடுத்தடுத்து மூன்று படங்கள் எஸ் கே நடிப்பில் வெளிவர இருக்கிறது. அதை அடுத்து மீண்டும் அவர் கமல் தயாரிப்பில் நடிக்கலாம் என்ற ஒரு பேச்சும் தற்போது அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது.

அமரன் வெற்றி தான் இதற்கு முக்கிய காரணம். ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இப்படியாக வரப்போகும் வருடம் சிவகார்த்திகேயனுக்கு அமோகமாக இருக்கிறது.

ஏற்கனவே விஜய் இடத்தை இவர் பிடிக்கப் போகிறார் என்ற ஒரு பேச்சு இருக்கிறது. தற்போது அவருடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் நிலையில் விரைவில் அந்த இடத்தை அவர் எட்டிப் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Trending News