செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

என் குடும்பமானமே உங்க கையில தான் இருக்கு.. இமானுக்கு போன் போட்டு கதறிய சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan-D Imman: தற்போது சோசியல் மீடியா முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இமான் சிவகார்த்திகேயன் குறித்து வெளியிட்ட ஒரு ரகசியம் தான். தன்னுடைய நம்பிக்கைக்கு அவர் துரோகம் செய்துவிட்டார் என கூறியதே பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்த சூழலில் இமானின் முதல் மனைவியுடன் இவருக்கு தவறான உறவு இருப்பதாகவும் ஒரு செய்தி அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கிறது.

நிச்சயம் அப்படி கிடையாது என்று ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வந்தாலும் பல சினிமா விமர்சகர்கள் இது உண்மைதான் என்று ட்வீட் போட்டு வருகின்றனர். இதனால் ட்விட்டர் தளமே இப்போது கொந்தளித்து போய் இருக்கிறது. இந்த சூழலில் சிவகார்த்திகேயன் நேற்று இரவு அதாவது இந்த வீடியோ வெளிவந்ததற்கு பிறகு இமானுக்கு போன் செய்து கெஞ்சி கதறி இருக்கிறார்.

அதில் அவர் இதை என்னுடைய அம்மா, அக்கா, மனைவி பார்த்தால் என்னுடைய லைஃபே காலி ஆகிவிடும். நான் தெரியாமல் உங்களுக்கு துரோகம் செய்துவிட்டேன், தயவு செய்து அந்த வீடியோவை ரிமூவ் பண்ண சொல்லுங்கள் என்று கதறி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் உங்கள் காலில் கூட நான் விழத் தயாராக இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

அப்போது கூட தன்னுடைய தப்பை அவர் உணர்ந்தது போல் தெரியவில்லை. இந்த பிரச்சனையில் இருந்து தற்சமயம் வெளி வந்தால் போதும் என்ற நிலைதான் அவருக்கு இருந்திருக்கிறது. இதை புரிந்து கொண்ட இமான் சொன்ன விஷயம் தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது என்னை தேடி வந்து நீ மன்னிப்பு கேட்க வேண்டாம்.

உன்னை பார்க்க கூட நான் விரும்பவில்லை. அந்த கடவுளிடம் மன்னிப்பு கேட்டு திருந்தி வாழ பாரு என்று சொல்லி இருக்கிறார். இந்த விஷயத்தை வலைப்பேச்சு பிஸ்மி வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே அவர்கள் இந்த விவகாரம் பற்றி பல மாதங்களுக்கு முன்பே ஜாடையாக சொல்லி இருந்தனர்.

இந்நிலையில் அது இமான் வாயாலேயே உறுதியாகி இருப்பது கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் சிவகார்த்திகேயனின் இமேஜ் ரொம்பவே டேமேஜ் ஆகி இருக்கிறது. அவருக்கு ஆதரவாக கருத்துக்கள் வெளி வந்தாலும் இந்த கசப்பான உண்மையை ஜீரணிக்கவே சில நாட்கள் ஆகும். அந்த அளவுக்கு இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.

Trending News