வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அஜித், விக்ரமை பார்த்து ஜெர்க்காகி ரூட்டை மாற்றிய சிவகார்த்திகேயன்.. ஹாட்ரிக் வெற்றி பெறுமா பிரின்ஸ்

சிவகார்த்திகேயன் டாக்டர், டான் படங்களின் வெற்றியை தொடர்ந்து பிரின்ஸ் படத்தில் நடித்துள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இப்படத்தில் சத்யராஜ் கூட்டணி போட்டுள்ளார். இதனால் இப்படம் முழுக்க முழுக்க காமெடி ஜானரில் எடுக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் பிரன்ஸ் படத்திற்கு போட்டியாக அதே நாளில் கார்த்தியின் சர்தார் படமும் வெளியாக உள்ளது. அதாவது சர்தார் படத்தில் கார்த்தி பல கெட்டப்புகள் போட்டு உள்ளார். மேலும் கார்த்தியின் முந்தைய படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Also Read : ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் சிவகார்த்திகேயன்.. டிஆர்பிக்காக கெஞ்சும் சேனல்

சர்தார் படத்திற்கு படக்குழு எங்கு பார்த்தாலும் பிரமோஷன் செய்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி இப்படத்தின் தமிழ்நாட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. இதனால் அதிக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த சூழலில் பிரின்ஸ் படத்தில் முக்கிய முடிவு ஒன்று சிவகார்த்திகேயன் எடுத்துள்ளார். அதாவது அஜித்தின் வலிமை மற்றும் விக்ரமின் கோப்ரா படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதற்கு காரணம் படத்தின் நீளம் அதிகமாக இருப்பதால் ரசிகர்களுக்கு சற்று அலுப்பு ஏற்பட்டது.

Also Read : சிவகார்த்திகேயனின் தெலுங்கு கனவு வொர்க் அவுட் ஆகுமா.. பிரின்ஸ் படத்திற்கு வந்த சோதனை

இதனால் படம் வெளியான பிறகு ரசிகர்களின் விமர்சனத்தை பார்த்துவிட்டு படத்தின் நீளத்தை வலிமை மற்றும் கோப்ரா படக்குழு குறைத்தது. பெரிய நடிகர்களுக்கே இந்த நிலைமையா என சிவகார்த்திகேயன் ஜெர்க்காகி ரூட்டை மாற்றி உள்ளார்.

அதாவது பிரின்ஸ் படத்தில் தற்போது சில காட்சிகளை கட் செய்துள்ளார்களாம். இதில் இடம்பெற்ற 12 நிமிட காட்சிகளை கட் செய்துள்ளதால் பிரின்ஸ் படம் மொத்தமாக 2 மணி நேரம் 11 நிமிடங்கள் ரன்னிங் டைமாக உள்ளது. இதனால் பிரின்ஸ் படம் சிவகார்த்திகேயனுக்கு ஹாட்ரிக் வெற்றி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

Also Read : மொத்த கதையையும் மாத்திட்டு படம் பெயிலியர் என கூவும் சிவகார்த்திகேயன்.. கடவுள் இருக்கான் குமாரு

Trending News