வளர்ந்து வரும் நடிகர்களுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் நடித்த ஹீரோ படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. ஆனாலும் 2021 ஆம் ஆண்டு டாக்டர் நடித்து முடித்து வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது.
அதேபோல் டான் படத்தில் தற்போது நடித்துக் கொண்டு வருகிறார். அடுத்த வருடம் வெளிவர உள்ள அயலான் படத்தில் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் என்னவென்று வெளிவந்துள்ளது.
ரவிக்குமார் இயக்கத்தில், ஏ ஆர் ரகுமான் இசையில், ரகுல் ப்ரீத்தி சிங்குடன் ஜோடி போட்டு சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஏலியனுடன் சிவகார்த்திகேயன் அடிக்கும் கூத்து மிகவும் காமெடி கலந்ததாக இருக்குமாம்.
அதேபோல் சிவகார்த்திகேயன் மினரல் சப்ளை செய்யும் ஏஜெண்டாக நடித்துள்ளார். தளபதி விஜய் ஏற்கனவே தலைவா படத்தில் இது போன்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயனை பொருத்தவரை தயாரிப்பாளர்கள் எந்த விதத்திலும் நஷ்டம் அடைய மாட்டார்கள். ஏனென்றால் இவரும் ஒரு பங்கு தயாரிப்பு செலவை ஏற்றுக் கொள்வார்.
இதனால் கண்டிப்பாக இவர் ஒப்புக்கொள்ளும் படம் வெற்றி பெற வேண்டும் என்ற சூழ்நிலையில் தள்ளப்பட்டு விடுவார். இதனால் பெரிய பெரிய முதலாளிகள் இவரை நம்பி பணத்தை கொட்டி வருகின்றனர்.