வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரஜினி உதாசீனப்படுத்திய இயக்குனர்.. ஆறுதல் கூறி அரவணைத்த சிவகார்த்திகேயன்

ரஜினி தற்போது இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார். அந்த வகையில் பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் திலிப்குமார் இப்போது ரஜினியின் ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்மரமாக நடந்து வரும் நிலையில் படம் குறித்து அப்டேட் விரைவில் வெளியாக உள்ளது.

இதைத்தொடர்ந்து இரண்டு, மூன்று படங்களை அடுத்தடுத்து கமிட்டாக உள்ளார். ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷாலை வைத்து லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார். இப்படத்தை லைக்கா தயாரிக்கிறது.

Also Read : ரஜினியின் 25 வருட சாதனையை முறியடிக்க போராடிய திரையுலகம்.. ஒருவழியாக முறியடித்த ராஜமவுலி

அதன் பிறகு சிபி சக்கரவர்த்தியுடன் ஒரு படமும், மணிரத்னத்துடன் ஒரு படமும் ரஜினி பண்ணுவதாக இருந்தது. ஆனால் இப்போது சிபி சக்ரவர்த்தியின் ஆட்டிட்யூட் பிடிக்காத காரணத்தினாலும், கதையும் ரஜினியை கவரவில்லை என்பதால் இந்த படத்தை சூப்பர் ஸ்டார் நிராகரித்து விட்டார்.

ஆகையால் வெளியில் ரஜினி படத்தை சிபிச் சக்கரவர்த்தி இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது இந்த படம் சூப்பர் ஸ்டார் வேண்டாம் என்று சொன்னதால் மிகுந்த மன வருத்தத்துடன் சிபி சக்கரவர்த்தி உள்ளார். இதனால் இப்போது சிவகார்த்திகேயன் சிபி சக்கரவர்த்திக்கு போனில் பேசி ஆறுதல் கூறியுள்ளாராம்.

Also Read : செஞ்ச தப்புக்கு பரிகாரம் செய்யும் சிவகார்த்திகேயன்.. நடிப்பை தாண்டி ரஜினியை ஃபாலோ செய்யும் மாஸ்டர் மைண்ட்

அதாவது ரஜினி படம் போனால் பரவாயில்லை நாம் இருவரும் மீண்டும் இணைந்து ஒரு படம் பண்ணலாம் என்று சிவகார்த்திகேயன் ஆறுதல் கூறியிருக்கிறாராம். ஏற்கனவே இவர்கள் டான் படத்தில் இணைந்து பணியாற்றி இருந்தனர். இப்படம் 100 கோடியை தாண்டி வசூல் வேட்டையாடி இருந்தது.

ஆனால் டான் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் மற்றும் சிபி சக்கரவர்த்தி இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. ஆனால் இப்போது சிபி சக்கரவர்த்தி மன கஷ்டத்தில் இருப்பதை தெரிந்து உடனே சிவகார்த்திகேயன் போன் செய்து இவ்வாறு பேசி உள்ளது அவருடைய நல்ல குணத்தை காட்டுவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Also Read : நின்றுபோன படத்தை தூசி தட்டும் ரஜினி.. தலைவர் முடிவால் உச்சகட்ட சந்தோஷத்தில் லைக்கா

Trending News