வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

70 கோடி கடனில் சிக்கித் தவிக்கும் சிவகார்த்திகேயன்.. பேராசை பெருநஷ்டம் ஆன கதை!

கடந்த 8 வருடத்தில் தமிழ் சினிமாவில் உச்சத்திற்கு சென்ற நடிகர்களை எடுத்துப்பார்த்தால் அதில் சிவகார்த்திகேயன் மட்டும் தான் இருப்பார். டிவியில் இருந்து வந்திருந்தாலும் தனக்கு என்ன வரும் என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு சினிமாவில் அதை செய்து தற்போது பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சிவகார்த்திகேயன் படம் என்றால் கண்டிப்பாக குடும்பத்துடன் பார்க்கலாம் என்ற முத்திரையைப் பதித்து விட்டார். இதன் காரணமாகவே சிவகார்த்திகேயன் சுமாரான படங்கள் நடித்தாலும் ஓரளவு நல்ல வசூலை பெற்று வருகின்றனர். அது மட்டுமில்லாமல் சினிமாவில் பதினைந்து இருபது வருடம் உழைத்துக் கொண்டிருக்கும் நடிகர்கள் கூட இன்னும் பத்து கோடி சம்பளத்தை தாண்டாத நிலையில் சினிமாவுக்கு வந்த வெறும் இரண்டு வருடத்திலேயே தன்னுடைய உழைப்பின் மூலம் தற்போது 20 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

இருந்தாலும் சிவகார்த்திகேயனுக்கு தற்போது 70 கோடிக்கு மேல் கடன் உள்ளதாக கூறுகின்றனர். சிவகார்த்திகேயன் ஒரு கட்டத்திற்கு பிறகு தன்னுடைய மேனேஜர் ஆர் டி ராஜா என்பவருடன் இணைந்து பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ரெமோ, வேலைக்காரன், சீமராஜா போன்ற படங்கள் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்த படங்களாக மாறியது.

ரெமோ படம் தமிழ் நாட்டில் நல்ல வசூல் செய்தாலும் மற்ற மாநிலங்களில் அதிகமாக விற்பனை செய்ததால் அங்கே படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. ஆர் டி ராஜா தயாரித்த படங்கள் அனைத்துமே சிவகார்த்திகேயன் தான் தன்னுடைய சொந்த தயாரிப்பில் தயாரித்தார் என பேச்சுக்கள் கிளம்பிய நிலையில் அந்தப் படங்களால் ஏற்பட்ட நஷ்டத்தை தானே ஏற்றுக்கொண்டு தற்போது அதைக் கட்டி வருகிறாராம்.

இந்த மூன்று படங்களின் நஷ்டத்தால் மட்டுமே கிட்டத்தட்ட ஒரு 70 கோடி கடன் உள்ளதாம். இப்போது வரை ராஜா தயாரித்த படங்கள் அனைத்துமே சிவகார்த்திகேயன் சொந்தமாக தயாரித்த படங்கள்தான் என கோலிவுட் வட்டாரங்களில் அடித்துக் கூறுகிறார்கள். மேலும் பேராசைப்பட்டு வீணாய் போய் விட்டார் எனவும் கிண்டலடிக்கின்றனர்.

அதற்காகவே தற்போது ஒவ்வொரு நிறுவனத்திலும் குறைந்தது இரண்டு மூன்று படங்களாவது செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார். என்னதான் கோடி கோடியாக சம்பாதித்தாலும் நம்ம கைக்கு கொஞ்சம்கூட வரவில்லையே என வருத்தத்தில் உள்ளார் சிவகார்த்திகேயன்.

sivakarthikeyan-cinemapettai-01
sivakarthikeyan-cinemapettai-01

Trending News