
Sivakarthikeyan: அஜித்தின் மங்காத்தா, விஜய்யின் கோட் படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் வெங்கட் பிரபு. இவர் அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் கூட்டணி வைப்பதாக தகவல் வெளியானது.
மேலும் அந்த படம் முழுக்க முழுக்க காமெடி ஜானரில் எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது இந்த படம் காலதாமதமாக போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் சிவகார்த்திகேயன் என்று சொல்லப்படுகிறது.
அதாவது விஜய்யின் கோட் படத்தை வெங்கட் பிரபு இயக்கிய நிலையில் அதில் சிவகார்த்திகேயனும் கேமியோ ரோலில் நடித்திருந்தார். கோட் படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றாலும் ரசிகர்கள் வைத்திருந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது.
வெங்கட் பிரபுவை காக்க வைக்கும் சிவகார்த்திகேயன்
அதோடு சிவகார்த்திகேயன் சமீபத்தில் நடித்து வெளியான அமரன் படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ஆகையால் இப்போது வெங்கட் பிரபுவை ஒதுக்கி வைத்து விட்டு மற்ற இயக்குனர்கள் படத்தில் நடித்து வருகிறார்.
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் பராசக்தி படத்தில் நடிக்கிறார். அடுத்ததாக சுதா கொங்கராவுக்கும் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். அந்த படங்களில் நடித்து விட்டு தான் வெங்கட் பிரபு.
2026 ஆம் ஆண்டு இறுதியில் தான் வெங்கட் பிரபுவுக்கு டேட் கொடுத்திருக்கிறாராம். அதுவும் சிவகார்த்திகேயன் ஆபீஸுக்கு நடையாய் நடந்து தான் இதை வாங்கி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. பெரிய இயக்குனராக இருந்தும் அவருக்கே இப்படிப்பட்ட நிலைமையா என கோலிவுட் வாயைப் பிளக்கிறது.