வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

சிவகார்த்திகேயனின் டான்(DON) படத்தில் நடிக்க ஆசையா? உடனடியா இதை பண்ணுங்க!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் டான். இத்திரைப்படத்தை அட்லீயின் அறிமுக இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளார். இப்படம் முழுக்க முழுக்க காலேஜில் நடக்கும் கலாட்டா பற்றி எடுக்க உள்ளனர்.

இப்படத்தை லைக்கா புரொடக்ஷன் உடன் இணைந்து சிவகார்த்திகேயன் எஸ் கே புரோடக்சன் தயாரிக்க உள்ளது. மேலும் சிவகார்த்திகேயன் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தில் நடிப்பதற்கான தகவல் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த வெளியீட்டில் 18 வயதிலிருந்து 25 வயது உள்ளவர்களும், மேலும் 30 வயதிலிருந்து 45 வயது உள்ளவர்களும் புகைப்படம் மற்றும் ஒரு நிமிட வீடியோவை அவர்கள் குறிப்பிட்ட மெயில் ஐடி அனுப்புமாறு படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

sivakarthikeyan cinemapettai
sivakarthikeyan-cinemapettai

சினிமாவில் வெற்றியாளராக ஆக வேண்டும் நினைப்பவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் இவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையை பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் அறிமுக நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு சினிமா பேட்டை சார்பாக வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம்.

Trending News