சிவகார்த்திகேயன் சுதா கொங்காரா ப்ராஜெக்ட் டேக் ஆப் ஆகிறது. வில்லன் பிரச்சனை, சிவகார்த்திகேயன் டேட் பிரச்சனை என பல தடைகள் இந்த படத்திற்கு வந்தாலும் இப்பொழுது ரூட் கிளியர் ஆகியுள்ளது.
இந்த படத்தில் ப்ளூ காலர் வில்லனாக ஜெயம் ரவி நடிக்கிறார். இந்த படத்திற்கான கெட்டப் விஷயத்தில் ஏற்கனவே சுதாவிற்கும், சிவாவிற்கும் பிரச்சனை வந்தது ஆனால் அதெல்லாம் இப்பொழுது சரியாகிவிட்டது.
சிவகார்த்திகேயன் புறநானூறு படத்தை ஒதுக்கிவிட்டு சிபி சக்கரவர்த்தி படத்தை முதலில் பண்ணுவதாக இருந்தார். ஆனால் அவர் விருப்பப்பட்ட ஒரு ஹீரோயின் டேட் கிடைக்காததால் இப்பொழுது புறநானூறு படம் பண்ணுவதற்கு தயாராகி விட்டார்.
ஓராண்டுக்கு முன்பு கமிட்டான சிபி சக்கரவர்த்தி படத்தில் முதலில் நடிப்பதாக இருந்தது பிரியங்கா மோகன் ஆனால் இப்பொழுது அவர் இல்லை, தற்சமயம் ராஸ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். இதற்கு முழு காரணம் சிவகார்த்திகேயன் தானாம்.
சிவகார்த்திகேயனும், சிபி சக்கரவர்த்தியும் நெருங்கிய நண்பர்கள். இந்த படத்திற்கு ராஷ்மிகா மந்தனா தான் வேண்டுமென அடம்பிடித்து வருகிறாராம் சிவகார்த்திகேயன். ஆனால் அவர் டேட் இப்போதைக்கு இல்லை. அடுத்த மார்ச் மாதம் தான் கிடைத்துள்ளது. இதனால்தான் புறநானூறுவை கையில் எடுத்துவிட்டு, சிபி சக்கரவர்த்தி படத்தை தள்ளி போட்டுள்ளார்.