வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அஜித்தை டேமேஜ் செய்த அமரனின் விஷமிகள்.. சிவகார்த்திகேயன் கூலிப்படை செய்யும் வேலை

Sivakarthikeyan fans diplomacy to damage Ajith and take the vijay’s place: “கூட இருக்கிறவங்கள நாம பாத்துக்கிட்டா மேல இருக்கிறவன் நம்மள பாத்துக்கிடுவான்”,வீரம் படத்தில் அஜித் கூறிய இதே டயலாக்கை கௌதம் கார்த்திக்கின் படவிழா ஒன்றில் அஜித்தை மேற்கோள் காட்டியே பேசிய சிவகார்த்திகேயன் இன்று அவருக்கே எதிராக திரும்பி உள்ள காலமும் வந்துள்ளது.

எந்த ஒரு பலமான திரை பின்புலமும் இல்லாமல் தனது திறமையின் மூலமும் கடின உழைப்பின் மூலமும் முன்னுக்கு வந்தவர்கள் ரஜினி, அஜித் மற்றும் இவர்களின் வரிசையில் சிவகார்த்திகேயன். போட்டி நிறைந்த இந்த சினிமா உலகில் கடின உழைப்புடன் போராடும் இவர்களுக்கு உள்ளேயே போட்டி நிலவுகிறது என்பது முற்றிலும் உண்மை.

அடுத்த சூப்பர் ஸ்டார் யாரு? அடுத்த தளபதியாரு? என இவர்களின் ரசிகர்கள் தங்களுக்குள் போட்டா போட்டி போட்டுக் கொண்டு அதே சமயத்தில் பிரபலங்களையும் அதில் உள்நுழைத்து விடுகிறார்கள். சூப்பர் ஸ்டார் சாதாரணமாக பேசிய கதையில் ஆரம்பித்து பட்டம் வரைக்கும். ரஜினி மற்றும் விஜய் இடையே மோதல் உருவாக, லால் சலாம் பட ஆடியோ லான்ச்சில் இதுபற்றி பகிரங்கமாக அறிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினி.

Also read: நிற்க நேரமில்லாமல் வரிசை கட்டும் 4 படங்கள்.. சிவகார்த்திகேயன் இடத்தை பிடிக்க தயாராகும் கவின்

சூப்பர் ஸ்டார் பட்டம் ஓய்ந்தது என்று பார்த்தால் தற்போது குட்டி தளபதி என்று சிவகார்த்திகேயனை ஏத்திவிட்டு வேடிக்கை பார்க்கின்றது ஒரு கூட்டம். விஷமிகள் சிலரின் சதி செயல்களால் உண்மையான ரசிகர்களுக்கு களங்கம் ஏற்படுவதோடு பிரபலங்களுக்கிடையேவும் இது பேசுபொருளாக மாறி உள்ளது.

ரஜினி, கமல், அஜித், விஜய் இவர்களுக்கு அடுத்தபடியாக வெற்றி படுகட்டிகளில் ஜெட் வேகத்தில் முன்னேறி வருபவர் சிவகார்த்திகேயன். விஜய் அரசியலுக்கு போக அவரின் இடத்தை பிடிக்கவும் அதற்கு போட்டியாக இருக்கும் ஒருவரான அஜித்தை வீழ்த்தவும் என பல தந்திர வேலைகளை செய்து வருகின்றனர் வலைதள விஷமிகள்.

சமீபகாலமாகவே அஜித் பற்றிய அவதூறு பேச்சுக்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. “வாங்க அஜித்தை புறக்கணிப்போம்” என்ற வாசகத்துடனையே அஜித்தை டேமேஜ் செய்து வைரலாக்கி வருகின்றனர். சிவகார்த்திகேயனும் அஜித்தும் இதைப்பற்றி வாய் திறக்காமல் இருக்கவே நாரதர் வேலைகளை அரங்கேற்றுகின்றனர் சிலநம்பியார்கள்.

Also read: அஜித்துக்காக எழுதப்பட்ட 5 கதைகள்.. முதல் கோணல் முற்றிலும் கோணலாய் முடிந்த பாலாவின் நட்பு

Trending News