வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஜெட் வேகத்தில் பறந்து வரும் சிவகார்த்திகேயன்.. Sk 23 படத்தின் புதிய அப்டேட்

Sivakarthikeyan Movie Update: அசர்கிற நேரத்துல தான் ஆட்டைய போடணும் என்று ஒரு சொலவடை சொல்வார்கள். அதுபோலதான் சிவகார்த்திகேயனின் செயல்கள் இருக்கிறது. அதாவது விஜய் அரசியல், அஜித் டைம் பாஸ்க்கு படங்களில் நடிப்பது, ரஜினி வருஷத்துல ஒரு தடவை படம் பண்ணுவது, கமல் பெயர் சொல்ற மாதிரி ஒரு படத்தை பண்ண வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஒரு கோட்பாடு வைத்து அதன்படி நடித்து வருகிறார்கள்.

இந்த நேரத்தில் நம்முடைய வளர்ச்சி அசுர வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதால் அடுத்தடுத்து நிற்காமல் ஓடிக்கொண்டே வருகிறார் எஸ்கே. இந்த ஆண்டு பொங்கலையொட்டி மாவீரன் திரைப்படம் வெளிவந்து கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் அளவில் எந்தவித நஷ்டமும் இல்லாமல் ஓடி விட்டது.

இதனை அடுத்து கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் ஒரு பயோபிக் கதையை சீரியஸாக நடித்துக் கொண்டு வருகிறார். இப்படம் கண்டிப்பாக சிவகார்த்திகேயனின் கேரியரில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அளவிற்கு வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றிக் கூட்டணி உடன் சம்பவம் செய்யப் போகும் எஸ்கே

அதற்கு விஜய்யின் ஃபார்முலாவை பாலோவ் பண்ணும் விதமாக ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அடுத்த படத்திற்கான வேலைகளிலும் களம் இறங்கி விட்டார். அந்த வகையில் சிவகார்த்திகேயனின் 23 வது படத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு விட்டார். இப்படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கப் போகிறார்.

இதற்கான அறிவிப்புகள் வந்த நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. இதனை அடுத்து தற்போது மயிலாப்பூர் மற்றும் திருமயிலை ரயில்வே ஸ்டேஷனில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

ஆனால் அந்த இடத்திற்கு போனதும் ஏஆர் முருகதாஸ்க்கு ஒரு எமோஷனலான பழைய ஞாபகங்கள் வந்திருக்கிறது. அதாவது இதே இடத்தில் தான் 23 வருடங்களுக்கு முன் ரமணா படத்தின் ஷூட்டிங் நடைபெற்று இருக்கிறது. அதனால் அந்த இடத்திற்கு போனதும் ஏஆர் முருகதாஸ்க்கு விஜயகாந்தின் ஞாபகங்கள் வந்திருக்கிறது. அத்துடன் மிஸ் யூ கேப்டன் என்று ஹேஷ்டேக் போட்டு ஃபீல் பண்ணி இருக்கிறார்.

23 வருடங்களுக்கு முன் ரமணா படத்தின் ஷூட்டிங்

ar murugadass
ar murugadass

அடுத்ததாக இந்த கூட்டணியில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் கமிட் ஆகியுள்ளார். இப்படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் தயாரிக்கப் போகிறது. மேலும் வழக்கம்போல் ராக்ஸ்டார் அனிருத் தான் இசையமைக்கப் போகிறார்.

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட 150 கோடி முதல் 200 கோடி வரை போடப்பட்டிருக்கிறது. ஏ ஆர் முருகதாஸ் கூட்டணி கண்டிப்பாக வெற்றி கூட்டணியாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அந்த வகையில் இன்னும் இதில் வலுவை சேர்க்கும் அளவிற்கு சிவகார்த்திகேயன் நடிப்பு ஒரு சம்பவத்தை செய்வதற்கு தயாராகிவிட்டார்.

Trending News