வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

விஜய் கொடுத்த துப்பாக்கியை கரெக்டா பிடிக்கும் எஸ்கே.. அடுத்தடுத்து செக் வைக்கும் மேஜர் முகுந்த்

கிட்டத்தட்ட 200 கோடிகளை வசூலித்து விட்டது அமரன் படம். தமிழ்நாட்டில் மட்டும் 93 கோடிகள் வசூலித்து சாதனை செய்துள்ளது. விஜய் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொள்வதால் அடுத்த விஜய்யின் இடம் இவருக்குத்தான் என பேச்சுக்கள் அடிபட்டது. அதற்கேற்றார் போல் விஜய் நடித்த கோட் படத்தில் சில வசனங்கள் இடம் பெற்றது.

இப்பொழுது விஜய் இடத்தை பிடித்தாரோ, இல்லையோ விஜய் செய்த காரியங்களை எல்லாம் ஒன்று விடாமல் பின்பற்றி வருகிறார். இவரது லைன் அப்பில் அடுத்தடுத்து படங்கள் குவிந்து வருகிறது. இப்பொழுது ஏ ஆர் முருகதாஸுடன் ஒரு படம் பண்ணிக் கொண்டிருக்கிறார். அது முடிந்தவுடன் சுதா பொங்காராவின் புறநானூறு படம் பண்ணுகிறார்.

கோட் படத்தில் விஜய்யை பார்த்து சிவா உங்களுக்கு இதைவிட முக்கியமான வேலை இருக்கிறது, உங்கள் வேலையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறுவது போல் ஒரு வசனம் இடம் பெற்றது. அதற்கு ஏற்றார் போல் இப்பொழுது விஜய் நடித்த படத்தின் இயக்குனர்களுக்கெல்லாம் சிவகார்த்திகேயன் வலை வீசி வருகிறார்.

ஏற்கனவே விஜய்க்கு அஸ்தான இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் உடன் ஒரு படம் பண்ணுகிறார். அதுபோக புறநானூறு படம் முடிந்தவுடன் இயக்குனர் ஹச் வினோத்திற்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார். கோட் படத்தை எடுத்த இயக்குனர் வெங்கட் பிரபுவும், சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை பிளான் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

இப்படி விஜய்யை வைத்து படம் பண்ணிய இயக்குனர்கள் எல்லோரும் அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து படம் பண்ண இருக்கிறார்கள். இயக்குனர்களை தேர்வு செய்வதில் விஜய்யை அப்படியே பின்பற்றி வருகிறார் சிவகார்த்திகேயன். விஜய் நடித்து சூப்பர் ஹிட்டாகிய துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்திலும் சிவகார்த்திகேயன் நடிப்பதாக ஒரு பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.

Trending News