சிவகார்த்திகேயன் இன்று வெற்றி கிடைத்தது, வளர்ந்து விட்டோம் என்ற மம்மதையே இல்லாமல் ஒவ்வொரு விஷயத்துலையும் இறங்கி அடித்து வருகிறார். சமீபத்தில் இவர் தேர்வு செய்திருக்கும் ப்ராஜெக்ட்டுகள் அனைத்தும் ஹிட் வரிசையில் இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுதா கொங்காராவின் பராசக்தி, ஏ ஆர் முருகதாஸ் , லோகேஷ் கனகராஜ், வெங்கட் பிரபு என அத்தனையும் தரமான ப்ராஜெக்ட்டுகள். தற்சமயம் பராசக்தி படம் முடியும் தருவாயில் இருக்கிறது. இந்த படத்தின் சூட்டிங் மதுரை காந்தி மண்டபத்தில் நடந்து வருகிறது. இதை முடித்துவிட்டு அடுத்து ஏ ஆர் முருகதாஸ் உடன் கைகோர்க்கிறார்.
இதற்கிடையில் எந்த ஒரு ஆட்டிட்யூடும் காட்டாமல் நல்ல இயக்குனர்களை தானே தேடிச் சென்று அவர்களிடம் படம் பண்ணலாம் என பரிந்துரைக்கிறார். இப்படி அமைந்த கூட்டணி தான் சுதா கொங்காரா மற்றும் லோகேஷ் கனகராஜ். ஏற்கனவே சூர்யா ரிஜெக்ட் செய்த பராசக்தி கதையையும் இவர்தான் தேடிச் சென்றுள்ளார்.
இப்படி நல்ல இயக்குனர்களை மதித்து சரியான கதையை தேர்வு செய்கிறார் எஸ்.கே. சமீபத்தில் ஸ்டண்ட் கோரியோகிராப்ஃபில் இருந்து இயக்குவதையும் கையில் எடுத்த அன்பறிவு மாஸ்டர்களை சந்தித்துள்ளார். இவர்களிடமும் கதை ரெடி பண்ண சொல்லி வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.
ஏற்கனவே அன்பறிவு மாஸ்டர்கள் கமலை வைத்து ஒரு படம் பண்ண இருக்கிறார்கள். தக்லைப் படம் முடிந்தவுடன் கமல் இதில் இணையயுள்ளார். இப்படி சரியான யுத்தியை பயன்படுத்தி பெரிய இயக்குனர்கள் மட்டுமல்லாது புதுப்புது இயக்குனர்களை வளைத்து போடுகிறார் சிவகார்த்திகேயன்.