சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சிக்கி சின்னாபின்னமான சிவகார்த்திகேயன்.. கடன், கள்ளகாதல் என அவரை சுற்றும் சனி

Rajini-Vijay-Sivakarthikeyan: நடிக்க வந்த வேகத்திலேயே கிடு கிடுவென உயரத்திற்கு சென்ற சிவகார்த்திகேயனின் நிலைமை இப்போது கொஞ்சம் தடுமாற்றமாக இருக்கிறது. அதிலும் ரஜினி, விஜய்யை பார்த்து அகல கால் வைத்து இப்போது அதல் பாதாளத்திற்கு சென்ற இவரை பற்றிய பேச்சு தான் இப்போது மீடியாக்களுக்கு தீனி போட்டு வருகிறது.

ஒரு காமெடியனாக தான் இவர் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹீரோ, ஆக்சன் ஹீரோ என்று படிப்படியாக உருவெடுத்து தயாரிப்பாளர், பாடலாசிரியர் என சிவகார்த்திகேயன் தன் திறமையை வெளிப்படுத்தினார். இதற்கு முக்கிய காரணம் ஆரம்பத்திலேயே இவர் இருப்பது போதும் என்று நினைக்காமல் பெரிய விஷயங்களுக்கு ஆசைப்பட்டது தான்.

அதனாலேயே நயன்தாரா, ஹன்சிகா போன்ற பெரிய பெரிய ஹீரோயின்களை தனக்கு ஜோடியாக நடிக்க வைத்து தனக்கான அந்தஸ்தை அடைந்தார். அதிலும் ஹன்சிகாவுடன் சிவகார்த்திகேயன் இணைந்த போது பல்வேறு நெகட்டிவ் விமர்சனங்களும் எழுந்தது. ஏனென்றால் அப்போது அவர் வளர்ந்து வரும் ஒரு ஹீரோவாக மட்டுமே இருந்தார்.

அப்படி இருந்தவருக்கு அடுத்தடுத்த படங்கள் வெற்றியை கொடுக்கவே வெகு சுலபமாக முன்னணி அந்தஸ்தை அடைந்தார். ஆனால் அதற்காக அவர் பல சிரமங்களையும் சந்தித்திருக்கிறார். அதைத்தொடர்ந்து ரெமோ, சீமராஜா ஆகிய படங்களில் அவர் கொடுத்த ஓவர் பில்டப் அவருக்கு சிறு பின்னடைவாக அமைந்தது.

மேலும் அவருக்கு நெருங்கியவர்களால் ஏமாற்றப்பட்டதால் 100 கோடி வரை கடன் சுமைக்கும் ஆளானார். அப்படி இருந்தவருக்கு டாக்டர் பாக்ஸ் ஆபிஸ் ஹீரோ என்ற அந்தஸ்தை கொடுத்த நிலையில் டான் படமும் பெரும் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து தெலுங்கு தயாரிப்பாளருடன் கூட்டணி அமைத்த இவருடைய ப்ரின்ஸ் காலை வாரிவிட்டது.

இருப்பினும் மாவீரன் கவனம் பெற்ற நிலையில் அயலான் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் தற்போது இமான் பிரச்சனையில் இவருடைய பெயர் படு பயங்கரமாக டேமேஜ் ஆகி இருக்கிறது. அதனால் இவருக்கு மார்க்கெட் சரியும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இப்படியாக திரைக்கு முன்னும் பின்னும் சிவகார்த்திகேயன் படாத பாடு பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Trending News