வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

நடிகர் சங்கம் கட்டிடத்திற்கு சிவகார்த்திகேயன் கொடுத்த பெரும் தொகை.. வாய பிளந்த மொத்த கோடம்பாக்கம்

Sivakarthieyan : நடிகர் சங்க கட்டிடம் எப்போது கட்டி முடிக்கப்படும் என்பது தான் பல வருடங்கள் ஆக கேட்கப்படும் கேள்வியாக இருக்கிறது. விஷால் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற போது முதல் வாக்குறுதியாக நடிகர் சங்க கட்டிடம் விரைந்து கட்டி முடிக்கப்படும் என்று கூறினார்.

ஆனால் நிதி நெருக்கடியால் நடிகர் சங்க கட்டிடம் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளது. 75% பணிகள் முடிந்த நிலையில் இன்னும் 25 சதவீத வேலை மட்டும் மீதம் உள்ளது. அதற்காக இப்போது பணிகளை விரைந்து முடிக்க செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் நடிகர் சங்கத்திற்கு தனது சொந்த பணம் மூலம் கமல் மற்றும் விஜய் ஆகியோர் தலா ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கி இருந்தனர். இது தவிர சூர்யா, உதயநிதி போன்றோரும் தங்களால் முடிந்த தொகையை கொடுத்தனர்.

நடிகர் சங்கத்திற்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்தியேன்

தற்போது வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயனும் தனது சொந்த பணத்தில் இருந்து 50 லட்சம் தொகையை நடிகர் சங்கம் கட்டிடத்திற்கு கொடுத்திருக்கிறார். தனது வருமானத்தின் மூலம் ஈட்டிய இந்த தொகையை நடிகர் சங்க கட்டிடத்தின் தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தி இடம் வழங்கியுள்ளார்.

south-indian-artistes-assocation
south-indian-artistes-assocation

மேலும் சிவகார்த்திகேயன் கொடுத்த பணத்திற்கு நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளனர். சிவகார்த்திகேயன் போல் உள்ள மற்ற சில பெரிய நடிகர்கள் உதவி செய்தால் மிக விரைவில் நடிகர் சங்க கட்டிடம் முடிக்கப்படும்.

மேலும் இந்த கட்டிடத்தில் கிட்டதட்ட 1000 பேர் அமரும் படியான ஆடிட்டோரியம் கட்டப்படுகிறது. அதோடு 800 இருக்கைகள் கொண்ட மண்டபமும், 300 இருக்கைகள் கொண்ட சிறிய மண்டபமும் அமைக்கப்பட்டு வருகிறது.

Trending News