ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

Sivakarthikeyan: கேமியோ கதாபாத்திரத்திற்கு வரும் சிவகார்த்திகேயன்.. தன் இடத்திற்கு ஆசைப்பட்ட ஹீரோக்கு எஸ் கே செய்யும் உதவி

நடைமுறை காலங்களில் சினிமாவில் கேமியோ எனப்படும் கெஸ்ட் ரோல்களுக்கு செம மவுஸ் உண்டாகி வருகிறது. அப்போது இருந்தே இந்த ட்ரெண்ட் நடைமுறையில் இருந்தாலும் சமீபத்தில் தான் இது மாஸ் ஹிட் ஆகியுள்ளது. பான் இந்தியா படங்களால் இந்த கலாச்சாரம் இப்பொழுது பெருகி உள்ளது.

ஆரம்பத்தில் விஜய் சேதுபதி நிறைய படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தாலும் ஓரளவுதான் ரீச் ஆனது. இப்படிப்பட்ட கேமியோ ரோல் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தால் தான். எல்லாம் லோகேஷ் கனகராஜ் செய்த மாயம்தான்,

தன் இடத்திற்கு ஆசைப்பட்ட ஹீரோக்கு எஸ் கே செய்யும் உதவி

விக்ரம் படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் 10 நிமிடம் சூர்யா நடித்திருப்பார். அவர் நடித்த ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தை தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். அதிலிருந்து இந்த கேமியோ கதாபாத்திரம் பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ளது. ரஜினி நடித்த ஜெயிலர் படத்திலும் இது பெரிய ட்ரெண்டை உருவாக்கியது.

மோகன்லால், சிவராஜ்குமார் போன்றவர்கள் தமிழ் படங்களில் கெஸ்ட் ரோல் பண்ணுகிறார்கள். இதற்கு மற்றொரு காரணம் பேன் இந்தியா படங்கள் தான். இப்பொழுது சிவகார்த்திகேயனும் ஒரு படத்தில் கேமியோ ரோலில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறார். அதுவும் அடுத்த சிவகார்த்திகேயன் நான்தான் என கூறிக் கொண்டிருக்கும் ஹீரோவிற்கு.

கவின் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் ஸ்டார். இந்த படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் 20 நிமிடம் சிவகார்த்திகேயன் கெஸ்ட்ரோலில் நடிக்கிறார். வளரும் ஹீரோ நண்பர் கவினுக்காக சம்பளம் வாங்காமல் நடிக்கிறாராம்.

Trending News