திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ரஜினியின் வசனத்தை டைட்டிலாக வைத்த சிவகார்த்திகேயன்.. இதுக்கு ஒரு எண்டே கிடையாதா சிவா

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றி பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்ப காலத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து தான் தற்போது முன்னணி நடிகர்கள் பட்டியலில் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக சிவகார்த்திகேயனை குழந்தைகள் அதிகளவில் விரும்புகிறார்கள்.

தற்போது சிவகார்த்திகேயன் கைவசம் டாக்டர், அயலான், டான் ஆகிய படங்கள் உள்ளன. இதில் டாக்டர் திரைப்படம் முழுவதுமாக முடிவடைந்து விரைவில் வெளிவர உள்ளது. மற்றொரு படமான அயலான் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ரொமாண்டிக் கலந்த காமெடி படமாக உருவாகி வரும் டான் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு சிங்கப்பாதை என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் அப்பா, மகன் என இருவேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை இயக்குனர் அட்லியின் உதவி இயக்குனரான அசோக் என்பவர் இயக்க உள்ளார்.

கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். படத்தின் நாயகி மற்றும் பிற நடிகர் நடிகைகள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சில நிமிடம் மட்டும் இரண்டு வேடங்களில் சிவகார்த்திகேயன் தோன்றி இருப்பார். ஆனால் முழு படத்திலும் இரட்டை வேடங்களில் நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் படங்கள் என்றாலே சிரிப்பிற்கு பஞ்சமிருக்காது எனும் எதிர்பார்ப்பில் தான் ரசிகர்கள் திரையரங்கிற்கு வருகிறார்கள். அந்த வரிசையில் இவரது நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. அதேபோன்று இனிவரும் படங்களும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கலாம்.

sivakarthikeyan-cinemapettai
sivakarthikeyan-cinemapettai

ஏற்கனவே ரஜினி பல வெற்றிப்படங்களில் அப்பா, மகன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். அதேபோல் தற்போது சிவகார்த்திகேயன் முயற்சி செய்கிறார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Trending News