வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

துரோகின்னு முத்திரை குத்திய இமான்.. மௌனம் கலைத்து பதிலடிக்கு தயாரான சிவகார்த்திகேயன்

Actor Sivakarthikeyan: கடந்த சில மாதங்களாகவே சிவகார்த்திகேயன், இமான் பிரச்சனை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இமான் துரோகி என முத்திரை குத்தினாலும் சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்து இதுவரை எந்தவிதமான விளக்கமும் வரவில்லை. இதுவே பல யூகங்களுக்கு வழி வகுத்தது.

ஆனால் தற்போது மௌனம் கலைத்து பதிலடி கொடுக்க தயாராகி இருக்கிறார் நம்ம வீட்டு பிள்ளை. அதன்படி இன்று அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழா தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடக்கிறது. அது ஒட்டு மொத்த பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி ஆக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று இன்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் சிவகார்த்திகேயனை வைத்து அயலான் படத்தை இயக்கி முடித்துள்ளார். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டு வந்த இப்படம் தற்போது ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது.

Also read: குதிரை மாதிரி விழுந்து எழுந்திருத்து ஓடும் 5 நடிகர்கள்.. கோடிகளில் கடன் இருந்தும் அசராத சிவகார்த்திகேயன்

அதன்படி அயலான் பொங்கல் ரேசில் களமிறங்க உள்ளது. அதே நாளில் தான் தனுஷின் கேப்டன் மில்லரும் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதுவே கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எதிரெதிர் துருவங்களாக இருக்கும் இவர்களில் யார் இந்த ரேஸில் ஜெயிக்கப் போகிறார்கள் என்பதையும் சினிமா ஆர்வலர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

இந்த சூழலில் இன்று நடைபெற இருக்கும் இசை வெளியீட்டு விழாவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எப்போதுமே இது போன்ற நிகழ்வுகளில் சிவகார்த்திகேயனின் பேச்சு ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும். ஆனால் அதையெல்லாம் தாண்டி இன்று அவர் பேசப்போவது நிச்சயம் இமானுக்கான பதிலடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த இசை வெளியீட்டு விழாவில் குறிப்பிட்ட சில ரசிகர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சி புத்தாண்டு தின ஸ்பெஷலாக சன் டிவியில் ஒளிபரப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: அந்த அசிங்கத்தை என் கண்ணால பார்த்தேன்.. சிவகார்த்திகேயனின் வண்டவாளத்தை அம்பலமாக்கிய பிஸ்மி

Trending News