முரண்டு பிடித்த சூர்யா, வாய்ப்பை தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன்.. தேசிய விருதுக்கு போட்ட ஸ்கெட்ச்

Surya Sivakarthikeyan
Surya Sivakarthikeyan

Sivakarthikeyan: திண்ணையில கடந்த உனக்கு திடுக்கின அடிச்சா தான் அதிர்ஷ்டம் என்று சொல்வார்கள். அப்படி ஒரு அதிர்ஷ்டம் தான் சிவகார்த்திகேயனுக்கு அடித்திருக்கிறது. தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனரின் படத்தை தட்டி தூக்கி இருக்கிறார்.

அதுவும் அந்த கதை சூர்யா நடிக்க வேண்டியது. சூரரைப் போற்று கூட்டணியில் மீண்டும் உருவாக இருந்த படம் தான் புறநானூறு. சுதந்திரத்திற்கு பிறகான இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாகக் கொண்டது இந்த கதைக்களம்.

சூர்யா இந்த படத்திற்கு ஓகே சொன்ன நேரம் பார்த்து ஜோதிகாவிற்கு அடுத்தடுத்து இந்தி பட வாய்ப்புகள் வர ஆரம்பித்து விட்டன. ஜோதிகாவும் மும்பையில் நிரந்தரமாக குடியேறும் முடிவை எடுத்துவிட்டார். இது போன்ற ஒரு சமயத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாகக் கொண்ட கதையில் சூர்யா நடிப்பது சரியாக இருக்காது.

இதனால் கதையையும், வசனத்தையும் ரொம்ப வலுவாக சொல்லாமல் கதையில் கொஞ்சம் மாற்றம் ஏற்படுத்தலாம் என சூர்யா சொல்லி இருக்கிறார். ஆனால் சுதா கொங்கராவுக்கு அந்த காலகட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை படமாக்க வேண்டும் என்பது எண்ணம்.

தேசிய விருதுக்கு போட்ட ஸ்கெட்ச்

இதனால் இவர்கள் இருவருக்கும் பேச்சு வார்த்தை பல நாட்களாக இழுப்பறியில் இருந்தது. ஆசையில் சூர்யா ரொம்பவும் முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் வேறொரு ஹீரோவை வைத்து இந்த படத்தை எடுக்க சுதா கொங்கரா முடிவு எடுத்துவிட்டார்.

பழம் நழுவி பாலில் விழுவது போல் புறநானூறு படம் இப்போது சிவகார்த்திகேயன் கைகளில் வந்து சேர்ந்து விட்டது. ஏற்கனவே சுதா கொங்கராவின் சூரரைப் போற்று படம் தேசிய விருது வாங்கியது. அடுத்து சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கும் அமரன் படத்துக்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

அதிலும் சுதா கொங்கராஇயக்கத்தில் இந்தி எதிர்ப்பு பற்றி எடுக்கப்படும் இந்த படம் கண்டிப்பாக தேசிய விருது வரை செல்ல வாய்ப்பு இருக்கிறது. தனக்கான பாதையை சரியாக அமைத்து வெற்றி படிகளில் ஏறிக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். வணங்கான் படத்தை தொடர்ந்து, வாடிவாசல் இழுபறி, புறநானூறு கை மீறி விட்டது. இனி சூர்யா எப்படி மீண்டும் தமிழ் சினிமாவில் எழுந்து வருவார் என தெரியவில்லை.

முரண்டு பிடித்த சூர்யா

Advertisement Amazon Prime Banner