வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நியாயவாதியாக நடந்து கொண்ட உதயநிதி.. நம்பி ஏமாந்த சிவகார்த்திகேயன்

Actor Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தில் தோல்வியுற்றாலும் அடுத்ததாக மாவீரன் படத்தில் நடித்து பட்டையை கிளப்பி உள்ளார். இப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவதுடன் வசூலையும் வாரி குவித்து வருகிறது. ஏனென்றால் பெரியவர்கள் முதல் குழந்தை வரை பார்க்கும் படமாக இப்படம் அமைந்திருக்கிறது.

மேலும் விஜய் சேதுபதியின் குரல் படத்திற்கு பிளஸ் பாயிண்டாக இருக்கிறது. இந்த சூழலில் சிவகார்த்திகேயன் நடுவில் சில படங்களை தயாரிப்பதாக பெரும் நஷ்டத்தை சந்தித்தார். தற்போது வரை அடைக்காமல் சில சாக்குபோக்கு சொல்லி வருகிறார். ஒவ்வொரு படம் நடிக்கும் போதும் 27 கோடி ரூபாய் கடனை அடைப்பதாக கடன்காரர்களிடம் கூறியிருக்கிறார்.

Also Read : பிசிறு தட்டாமல் ரஜினியை பாலோ செய்யும் சிவகார்த்திகேயன்.. மாவீரன் பட தயாரிப்பாளர் சொன்ன ரகசியம்

ஓரிரு படங்களில் இந்த தொகையை கொடுத்தாலும் சில படங்களில் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டாராம். இதனால் மாவீரன் படத்தை வெளியிடக் கூடாது என சிவகார்த்திகேயனுக்கு பணம் கொடுத்தவர்கள் பிரச்சனை செய்ய தொடங்கினர். இதனால் மாவீரன் படத்தை உதயநிதியிடம் கொண்டு சென்றார் சிவகார்த்திகேயன்.

ஏனென்றால் உதயநிதி வெளியிடும் படங்களில் பிரச்சனை எதுவும் வராது. அதேபோல் படத்தையும் வெளியிட்டு நல்ல லாபத்தை பார்த்து வந்தார். ஆனால் இப்போது சிவகார்த்திகேயனுக்கு பணம் கொடுத்தவர்கள் நேரடியாக உதயநிதியை சந்தித்துள்ளனர். மேலும் நடந்த விஷயம் எல்லாவற்றையும் கூறி இருக்கிறார்கள்.

Also Read : விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான்.. மொத்த பெயரையும் சல்லி சல்லியா உடைச்சிட்டாங்களே

உடனே நியாயவாதியாக நடந்து கொண்ட உதயநிதி எதைப் பற்றியும் யோசிக்காமல் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு சேர வேண்டிய லாபத்தை உங்களிடம் கொடுத்து விடுகிறேன் என்று வாக்கு கொடுத்து விட்டாராம். இப்போது சிவகார்த்திகேயனுக்கு மாவீரன் படத்தில் இருந்து லாபம் வந்தாலும் அவருக்கு எந்த பணமும் கிடைக்காது.

உதயநிதி என்பதால் சிவகார்த்திகேயனால் வேறு எதுவும் பேச முடியாமல் ஏமாற்றத்தை சந்தித்திருக்கிறார். சிவகார்த்திகேயனை பொறுத்தவரையில் உதயநிதி செய்தது தவறாக இருந்தாலும் எல்லோரும் முன்னிலையிலும் அவர் செய்தது நியாயம் என பிரபலங்கள் பலரும் கூறி வருகிறார்கள்.

Also Read : உதயநிதி தொட்டதெல்லாம் துலங்குது.. ரெட் ஜெயன்ட் மூலம் பல கல்லாப்பெட்டியை நிரப்பிய 5 பிளாக்பஸ்டர் படங்கள்

Trending News