வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட சிவகார்த்திகேயன்.. சுஹாசினி போல் செய்த தவறு

Actor Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் சினிமாவில் தனது அடுத்த அடுத்த படியை எதிர்நோக்கி முன்னேறி செல்கிறார். இந்த சமயத்தில் அவரே தனக்கு முட்டுக்கட்டை போடும்படி ஒரு விஷயத்தை செய்திருக்கிறார். ஏற்கனவே இதே போன்ற தவறை தான் சுஹாசினி மணிரத்தினம் செய்த நிலையில் இப்போது சிவகார்த்திகேயனும் செய்திருக்கிறார்.

அதாவது மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் ப்ரொமோஷனை படு பயங்கரமாக படக்குழு செய்திருந்தனர். ஆனால் ஒரு விழாவில் சுஹாசினி பேசியது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்திருந்தது.

Also Read : பிரின்ஸ் படத்தால் தெலுங்கு பக்கம் சாய்ந்த சிவகார்த்திகேயன்.. ஏற்றிவிட்ட ஏணியை வாரி விடுவதா?

ஆந்திராவில் பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் நடந்த போது இது உங்களுக்கான படம், நீங்கள் தான் இதை வெற்றி அடைய செய்ய வேண்டும் என்று பேசி இருந்தார். ஆனால் இது சோழர்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட படமாக எடுக்கப்பட்டிருந்தது. சுஹாசினி இவ்வாறு கூறியது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்துகிறது.

இப்போது அதே தவறை தான் சிவகார்த்திகேயனும் மாவீரன் படத்திற்கு செய்து இருக்கிறார். அதாவது இந்த படத்தின் டைட்டிலே ரஜினி படத்தின் டைட்டில். மேலும் பக்கா தமிழ் படமாக உருவாகியுள்ள மாவீரன் படத்திற்கு மற்ற மொழிகளில் தான் அதிகம் ப்ரோமோஷன் செய்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

Also Read : சின்ன வயசுலயே மாமா பொண்ணுக்கு ரூட் விட்ட சிவகார்த்திகேயன்.. ஆர்த்தியுடன் எடுத்துக்கொண்ட வைரல் போட்டோ

இது ஒரு புறம் இருக்க இன்று மலேசியா சென்றுள்ள சிவகார்த்திகேயன் அங்கு படத்தின் முக்கிய சஸ்பென்ஸான விஜய் சேதுபதி மாவீரன் படத்தில் குரல் கொடுத்திருப்பதை உடைத்துள்ளார். இந்நிலையில் நாளை திரையரங்குகளில் மாவீரன் படம் ரிலீஸாக இருக்கிறது. இப்போது தமிழ் ரசிகர்களை கடுப்பேற்றும் விதமாக சிவகார்த்திகேயன் இந்த செயலை செய்துள்ளார்.

இதனால் மாவீரன் படத்திற்கு ஏதாவது பின் விளைவு ஏற்படுமோ என்ற பயத்தில் படக்குழு இருக்கின்றனர். ஆனாலும் இது சிவகார்த்திகேயனிடம் கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒரு விஷயம். ஆகையால் ரசிகர்கள் இதை எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என்பது மாவீரன் வசூலில்தான் தெரியவரும்.

Also Read : உயரப் பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது.. விஜய்யை பார்த்து சிவகார்த்திகேயன் போட்ட பிளான்

Trending News