சிவகார்த்திகேயன்(sivakarthikeyan ) படத்தை இயக்க இருந்த இளம் இயக்குனர் ஒருவருக்கு உச்ச நடிகர் ஒருவரின் பட வாய்ப்பு கிடைத்ததால் தற்போது அந்த படத்தை இயக்கி விட்டு வாருங்கள் என்று பெருந்தன்மையுடன் கூறியதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து பின்னர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கமர்சியல் ஹீரோவாக வலம் வருபவர் தான் சிவகார்த்திகேயன். அவ்வப்போது சில சுமாரான படங்கள் கொடுத்தாலும் உடனே சுதாரித்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து விடுகிறார்.
அந்த வகையில் கடைசியாக வெளியான ஹீரோ படம் சுமாரான வெற்றியை பெற்றாலும் அடுத்ததாக உருவாகியிருக்கும் டாக்டர் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து டான் மற்றும் இளம் இயக்குனருடன் ஒரு படம் என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருந்தார் சிவகார்த்திகேயன். தேசிங்கு பெரியசாமி கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர்.
சிவகார்த்திகேயன் மற்றும் தேசிய பெரியசாமி கூட்டணியில் ஒரு படம் உருவாக இருந்த நிலையில் திடீரென அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பட வாய்ப்பு கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பது போன்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இதன் காரணமாக அவரை தொடர்பு கொண்ட சிவகார்த்திகேயன், சூப்பர் ஸ்டார் பட வாய்ப்பு கிடைத்தால் அதை செய்துவிட்டு வாருங்கள் எனவும், ஆனால் அதன் பிறகு என்னுடைய படம் தான் இயக்க வேண்டும் எனவும் கூறி விட்டாராம். இதனால் ரஜினி பட வாய்ப்பை எதிர்பார்த்து வழி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறார் தேசிங்கு பெரியசாமி.
