சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

பெரிய பட்ஜெட் படத்தில் காலடி எடுத்து வைக்கும் சிவகார்த்திகேயன்.. மினிமம் Guarantee ஹீரோ

சிவகார்த்திகேயனுக்கு அமரன் படம் மாபெரும் வரவேற்பையும் வெற்றியையும் கொடுத்தது. இதை தொடர்ந்து இவர் முக்கிய ஹீரோவாக இருக்கிறார்.

அப்படி அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். அந்த படம் அடுத்த வருடம் மே மாதம் வெளியாகவுள்ளது.

இதை தொடர்ந்து அவர் சிபி சக்கரவர்த்தி படத்தில் நடிக்கவிருக்கிறார். அந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா நடிக்க இருப்பதனால், அவர் தேதிக்காக காத்திருக்கிறார்.

அதற்குள் சுதா கொங்காராவின் படத்தில் நடித்து முடிக்கவிருக்கிறார். இப்படி இருக்க, அந்த படம் சிவகார்த்திகேயனின் 25-ஆவது படம் என்பதால், படத்தை ப்ரம்மாண்டமாக செய்யவேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

பெரிய பட்ஜெட் படத்தில் காலடி எடுத்து வாய்த்த SK

சிவகார்த்திகேயன் சுதா கொங்காரா கூட்டணியில் உருவாகும் புறநானூறு படம் தற்போது 150 கோடியில் உருவாகவுள்ளது. இது சிவகார்த்திகேயன் கேரியரில் பெரிய அந்தஸ்தை ஏற்படுத்தி கொடுக்கும் என்றே சொல்லலாம்.

அமரன் படம் 300 கோடியை தாண்டி வசூல் செய்ததால், சிவகார்த்திகேயனை மினிமம் Guarantee ஹீரோவாக பார்க்கப்படுகிறார். அவர் நடித்தால் நிச்சயம் 100 கோடி வசூல் செய்யும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.

பல காலமாக இருக்கும் ஹீரோக்கள் இன்னும் ஒரு 100 கோடி கொடுக்க திண்டாடும் நிலையில், சிவகார்த்திகேயன் செய்த சாதனை மாபெரும் சாதனையாகவே கோலிவுட்டில் பார்க்கப்படுகிறது.

இப்படி இருக்க இவரை பிரம்மாண்ட பட்ஜெட் படத்தில் தைரியமாக நடிக்கவைக்க முன்வருகின்றனர் தயாரிப்பாளர்கள். இதை தொடர்ந்து இவர் நடிக்கும் புறநானூறு படம், 400 கோடிக்கு மேல் வசூல் செய்யுமாம்.

Trending News