அடிக்கு மேல் அடி வாங்கும் சிவகார்த்திகேயன்.. மீண்டும் துணிச்சலாக எடுத்துள்ள முடிவு

கடந்த மாதம் வெளியான டாக்டர் படம் மூலம் டாப் நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது அயலான், டான், சிங்கப்பாதை உள்ளிட்ட தமிழ் படங்களிலும், ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் புதிதாக ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் தான் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளாராம். முன்னதாக மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான மண்டேலா படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. ஒய் நாட் ஸ்டுடியோஸ் வழங்க பாலாஜி மோகன் தயாரிப்பில் உருவாகி இருந்த இப்படத்தில் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாகவும், இப்படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் என்னதான் டாப் நடிகராக இருந்தாலும் அவருக்கு ஏராளமான கடன் பிரச்சனை உள்ளது. அந்த வகையில் அருவி படம் மூலம் பிரபலமான இயக்குனர் அருண் பிரபுவை நம்பி சிவகார்த்திகேயன் அவரது சொந்த நிறுவனம் மூலம் வாழ் படத்தை தயாரித்தார். ஆனால் அந்த படம் படுதோல்வியை சந்தித்தது.

முதல் படம் வெற்றி பெற்ற நம்பிக்கையிலும் அருண் பிரபு சொந்தக்காரர் என்பதாலும் சிவகார்த்திகேயன் அருண் பிரபுவிற்கு வாய்ப்பு அளித்தார். ஆனால் அவர் சிவகார்த்திகேயனை ஏமாற்றி விட்டார். இந்நிலையில் தற்போது மண்டேலா படத்தின் வெற்றியை பார்த்து மடோன் அஷ்வினுக்கு சிவகார்த்திகேயன் வாய்ப்பு வழங்கியுள்ளார். என்ன நடக்க போகிறது என்று தெரியவில்லை.