தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களுக்கு இணையாக சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் பிரபல ஓடிடி நிறுவனத்திற்கு சென்றுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம். இவருக்கு இவ்வளவு பெரிய மார்க்கெட்டா என மூக்கின் மேல் விரல் வைத்துள்ளார்களாம்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக தியேட்டரில் வெளியான ஹீரோ திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதையெல்லாம் சிவகார்த்திகேயனின் அடுத்த படமான டாக்டர் மாற்றிவிடும் என பெரிதும் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
கடந்த வருடமே வெளியாக வேண்டிய டாக்டர் திரைப்படம் கடைசியாக மார்ச் மாதம் 23 ஆம் தேதி முடிவு செய்யப்பட்டது. ஆனால் அப்போதும் படம் ரிலீசில் குளறுபடி ஏற்பட்டதால் மே மாதம் தள்ளி வைக்கப்பட்டது.
ரம்ஜான் விடுமுறையை முன்னிட்டு வெளியாக இருந்த டாக்டர் திரைப்படம் தற்போது நிலவிவரும் கொரானா சூழ்நிலை காரணமாக சுத்தமாக தியேட்டர் ரிலீஸிலிருந்து விலகி நேரடியாக ஓடிடி தளத்திற்கு சென்றுள்ளது.
அதில் ஆச்சரியம் என்னவென்றால் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா போன்றோரின் படங்களை போல சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் அமேசான் தளத்தில் கிட்டத்தட்ட 42 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம்.
விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என தெரிவித்து வருகின்றனர். தியேட்டர்காரர்கள் பெரும் நம்பிக் கொண்டிருந்த டாக்டர் படத்தை அமேசான் தளத்திற்கு தூக்கி கொடுத்ததால் பின்னாளில் தியேட்டர்காரர்கள் பஞ்சாயத்து பண்ண அதிக வாய்ப்பு இருக்கிறதாம்.
