புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அந்த நடிகையை அடுத்த படத்துக்கும் புக் பண்ணிருங்க.. கட்டளையிட்ட சிவகார்த்திகேயன்

சமீபகாலமாக சிவகார்த்திகேயனுடன் நடிக்க நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். அதற்கு காரணம் சிவகார்த்திகேயன் படம் வெற்றி பெறுகிறதோ இல்லையோ அந்த படத்தில் நடிக்கும் நடிகைகளுக்கு திடீரென பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி விடுகிறது.

அந்த வகையில் ஸ்ரீதிவ்யா, கீர்த்தி சுரேஷ் போன்றோரை குறிப்பிட்டுச் சொல்லலாம். தற்போது அவர்களது வரிசையில் சிவகார்த்திகேயனை மிகவும் கவர்ந்த நடிகையாக மாறி விட்டாராம் பிரியங்கா மோகன் என்பவர்.

முன்னதாக தெலுங்கு சினிமாவில் நானி நடிப்பில் வெளியான கேங் லீடர் எனும் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் பிரியங்காவை பார்த்துவிட்டுதான் டாக்டர் படத்திற்கு ஒப்பந்தம் செய்தாராம் சிவகார்த்திகேயன்.

டாக்டர் படத்தில் பிரியங்காவின் நடிப்பு சிவகார்த்திகேயனுக்கு மிகவும் பிடித்து விட்டதால் உடனடியாக தன்னுடைய அடுத்த பட வாய்ப்பை கொடுத்து விட்டாராம். அடுத்ததாக சிவகார்த்திகேயன் புதுமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் டான் படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படம் முழுக்க முழுக்க காலேஜ் கலாட்டாவாக உருவாக உள்ளது. காலேஜ் பொண்ணு வேடத்தில் பிரியங்கா அருள்மோகன் பக்காவாக பொருந்துவார் எனவும், டாக்டர் படத்தில் இருவரது ஜோடியும் நன்றாக இருப்பதாகக் கூறியதன் அடிப்படையில் அடுத்தப் படத்துக்கும் அட்வான்ஸ் கொடுத்து விட்டாராம்.

priyanka-arulmohan-cinemapettai
priyanka-arulmohan-cinemapettai

கீர்த்தி சுரேஷ் போலவே பிரியங்காவும் தமிழ் சினிமாவின் அடுத்த கனவுக்கன்னியாக வலம் வர அதிக வாய்ப்பு இருக்கிறதாம். இன்னும் டாக்டர் படம் கூட வெளியாகாத நிலையில் பிரியங்கா ஏற்கனவே ஒரு முன்னணி நடிகரின் படத்தில் ஒப்பந்தமாகி விட்டார் என்பதும் கூடுதல் தகவல்.

Trending News