சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

பல கோடியில் கடன் பிரச்சனை.. தமிழ் சினிமாவுக்கு குட்பாய் சொன்ன சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படம் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டு ஓரளவு லாபத்தை பெற்று தந்தது. அந்த படத்திற்கு அப்புறம் சிவாவின் சிங்க பாதை படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சிங்க பாதை படத்தின் கதை இன்னும் சரிவர அமையவில்லை அதில் சில, சில மாற்றங்கள் இருக்கிறது என்று அடுத்த படத்தின் சூட்டிங்கை தொடங்குவதற்கு சிவகார்த்திகேயன் ஏற்பாடு செய்து வருகிறார்.

சிவகார்த்திகேயனுக்கு டாக்டர் படம் நல்ல வசூலை பெற்று தந்தாலும், அவருக்கு 27 கோடி கடன்கள் இருக்கிறதாம். அதனால் வீட்டில் சும்மா இருக்க முடியாது என்ற காரணத்தினால் அடுத்த படமான, தெலுங்கு படத்தின் வேலைகளை ஆரம்பித்து உள்ளார்.

அந்த தெலுங்கு படம் வழக்கமான சிவகார்த்திகேயனின் காமெடி மற்றும் ரொமான்ஸ் கலந்த திரைப்படம். அதில் டூரிஸ்ட் கைடாக நடிக்கிறார். அந்தப் படத்திற்கு எமி ஜாக்சன் போன்று ஒரு வெளிநாட்டு ஹீரோயினை புக் செய்ய தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் தெலுங்கு படத்தின் சூட்டிங் ஹைதராபாத்திலும், சென்னையிலும் நடக்கவிருக்கிறது. அதிக கடன் இருப்பதாலும், சிங்க பாதை படத்தின் கதை கொஞ்சம் இழுபறியில் இருப்பதாலும் அடுத்த படமான தெலுங்கு படத்தின் சூட்டிங்கை வருகிற ஜனவரி 18ஆம் தேதி தொடங்க முடிவு செய்துள்ளார்.

sivakarthikeyan
sivakarthikeyan

Trending News