வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

தெலுங்கு சினிமா போனாலும் சிவகார்த்திகேயனை சுத்தி சுத்தி அடிக்கும் பிரச்சனை.. யார் செய்த சதியோ

விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியின் போட்டியாளராக ஆரம்பித்து தொகுப்பாளராக மாறி இன்று தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் வசூலில் பல கோடி சாதனை படைத்தது.

அதை தொடர்ந்து அவர் தற்போது டான், சிங்கப் பாதை உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் இது தவிர தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் ஒரு படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

காமெடி மற்றும் ரொமான்டிக் நிறைந்த படமாக உருவாகி வரும் இதில் சிவகார்த்திகேயன் டூரிஸ்ட் கைடாக நடிக்கிறார். மேலும் இதற்காக மிகவும் பாப்புலராக இருக்கும் நடிகையை புக் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிகர் சத்யராஜ் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக நடிகர் சத்யராஜுக்கு கொரோனா  தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தற்போது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

அவர் முழுவதும் குணம் அடைந்த பின்பே படப்பிடிப்பில் பங்கேற்க இருக்கிறார். இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு மாத காலத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மிகுந்த மன குழப்பத்தில் இருக்கிறார். சிவகார்த்திகேயன் திரைப்படங்களில் நடிப்பதை தவிர பட தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.

இதனால் அவருக்கு நிறைய கடன் பிரச்சினைகளும் இருக்கிறது. எப்படியாவது தெலுங்கு பக்கம் சென்று தன்னுடைய அனைத்து கடனையும் சரிசெய்துவிடலாம் என்று நினைத்திருந்த வேளையில் படப்பிடிப்பு தள்ளிப் போனது அவருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனக்கு மட்டும் பிரச்சனை சுத்தி சுத்தி வருதே என்று அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் தற்போது புலம்பி வருகிறார்.

Trending News